பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (நிகர்நிலைப் பல்கலைக்கழகம்) ‘ஸ்கில்லத்தான் 2025’ இல் ‘பிஎம்அய்எஸ்டி’ சிறப்பு மேன்மைச் சான்றிதழ் பெற்றது

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

வல்லம், டிச. 20- பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (PMIST), SKILL-A-THON காட்டிய சிறப்பான அர்ப்பணிப்பை அங்கீகரிக்கும் வகையில் Skillathon 2025 –- சிறந்த சான்றிதழ் விருதைப் பெற்றுள்ளது.

MongoDB Skill-a-thon 2025 நிகழ்வில் 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் வெற்றிகரமாக பங்கேற்று நிறைவு செய்ததன் மூலம், மாணவர்களின் பெருமளவான பங்கேற்பையும் தொழில்நுட்ப அடிப்படையிலான பயிற்சியின் பயன்தன்மையையும் நிறுவனம் நிரூபித்துள்ளது.

இந்த மதிப்புமிக்க அங்கீகாரம், மாணவர்களை வளர்ந்து வரும் தொழில்துறையின் தேவைகளை எதிர்கொள்ளத் தயார்படுத்தும் வகையில் தொழில்நுட்ப தயார் தன்மை, தொழில்துறைக்கு ஏற்ற திறன்கள் மற்றும் டிஜிட்டல் திறமைகள் வளர்ப்பதில் பல் கலைக்கழகம் காட்டும் உறுதியான அர்ப்பணிப்பை வெளிப்படுத்துகிறது.

இந்த Certificate of Excellence விருது, 2025 டிசம்பர் 16 அன்று சென்னை ராடிசன் ப்ளூ ஜி.ஆர்.டி. ஹோட்டலில் நடைபெற்ற MongoDB Conclave நிகழ்வில் வழங்கப்பட்டது. புதிய தொழில்நுட்பங்களின் பயன்பாடு மற்றும் அர்த்தமுள்ள தொழில்துறை ஒத்துழைப்பை ஊக்குவிப்பதில் நிறுவனம் தொடர்ந்து மேற்கொண்டு வரும் முயற்சிகளின் சான்றாக இந்த சாதனை விளங்குகிறது.

மாணவர்களின் வேலைவாய்ப்புத் திறன் மற்றும் எதிர்கால தயார் தன்மையை மேம்படுத்தும் புதுமையான திறன் மேம்பாட்டு திட்டங்கள் மற்றும் பெருமளவிலான டிஜிட்டல் முயற்சிகள் மூலம் மாணவர்களை அதிகாரமளிப்பதில் பிஎம்அய்எஸ்டி தொடர்ந்து தனது அர்ப்பணிப்பை உறுதிப்படுத்தி வருகிறது.

பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் (PMIST) சார்பில், முனைவர் பா.இளங்கோவன், இணைப் பேராசிரியர் மற்றும் ICT அகாடமி ஒருங்கிணைப்பாளர், மற்றும் முனைவர்  டி.மகேஷ் குமார், இணைப் பேராசிரியர் ஆகியோர் இந்நிகழ்வில் பங்கேற்று விருதை அதிகாரப்பூர்வமாக பெற்றுக்கொண்டனர்.

MongoDB Skill-a-thon 2025 நிகழ்விற்கான Single Point of Contact (SPOC) ஆக, சிறந்த தலைமைத்துவம், திறமையான ஒருங்கிணைப்பு மற்றும் தொடர்ச்சியான ஆதரவை வழங்கியதற்காக பேராசிரியர் பா. இளங்கோவன், இந்நிகழ்ச்சியை ஒருங்கிணைத்து வழங்கியதற்காக பாராட்டினர்.

அனைத்து துறைகளையும் சேர்ந்த பேராசிரியர்கள் குழுவு டன் அவர் மேற்கொண்ட சிறப் பான ஒருங்கிணைப்பு மற்றும் அர்ப்பணிப்பு முயற்சிகள், 1,000க்கும் மேற்பட்ட மாணவர்கள் இப்பாடநெறியில் பங்கேற்று வெற்றிகரமாக நிறைவு செய்யும் முக்கியமான சாதனையை நிறுவனம் அடையக் காரணமாக அமைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *