விளக்கு, மோட்டார், கார், ரயில், ஆகாய விமானம், தந்தி, டெலிபோன் இவைகள் யாவும் கடவுளால்; பக்தியால், கோயில் குளங்களுக்குச் செல்வதால் கண்டுபிடிகக்ப்பட்டனவா? மனிதனின் அறிவினால், சிந்தனையால் கண்டுபிடிக்கப்பட்டவைகளாகும். இவை யாவும் மேல்நாட்டாரால் கண்டுபிடிக்கப் பட்டவைகளேயாகும். நம் நாட்டில் நமது மக்கள் இவைகளையெல்லாம் அனுபவிக்கின்றார்களே ஒழிய, இதில் எதையும் நம் மக்கள் கண்டுபிடித்துள்ளார்களா? நம் மக்கள் கண்டுபிடித்ததெல்லாம் அந்தக் கோயிலுக்குப் போனால் அந்தப் பாவம் போகும், இந்தக் குளத்தில், ஆற்றில் குளித்தால் மோட்சத்திற்குப் போகலாம் என்பன போன்ற முட்டாள்தனங்களேயன்றி வேறென்ன?
– தந்தை பெரியார்,
‘பெரியார் கணினி’ – தொகுதி 1, ‘மணியோசை’
