வல்லம், டிச. 20- வல்லம், பெரியார் நூற்றாண்டு பாலிடெக்னிக் கல்லூரியின் சார்பாக பன்னாட்டு மனித உரிமைகள் உறுதிமொழி எடுக்கப்பட்டது.
பெரியார் நூற்றாண்டு பாலி டெக்னிக் கல்லூரியில் செயல்படும் நாட்டு நலப்பணித் திட்டம் சார்பாக 10.12.2025 அன்று கீழ்கண்டவாறு மனித உரிமைகள் உறுதிமொழி எடுத்துக் கொள்ளப்பட்டது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்திலும், இந்தியாவில் செயல்படுத்தத்தக்க பன்னாட்டு சட்டங்களிலும் வரை யறுக்கப்பெற்ற மனித உரிமைகள் குறித்து உண்மையுடனும், பற்றுறுதி யுடனும் நடந்து கொள்வேன் என்று நான் உளமார உறுதி மொழிகிறேன்.
எவ்வித வேறுபாடுமின்றி, அனை வரின் மனித உரிமைகளை மதித்து நடப்பதுடன், மனித உரிமைகளை பாதுகாக்கும் வகையில், நான் என்னுடைய கடமைகளை ஆற்றுவேன். என்னுடைய எண்ணம், சொல் அல்லது செயல் மூலம், பிறருடைய மனித உரிமைகளை மீறுகிற எந்தவொரு செயலையும், நேரடியாகவோ மறைமுகமாகவோ செய்ய மாட்டேன். மனித உரிமைகள் மேம்படுத்துவதற்கு, நான் எப்போதும் ஆயத்தமாக இருப்பேன் என்று உளமார உறுதி கூறுகிறேன் என்று உறுதிமொழி எடுத்தனர்.
இந்நிகழ்வில் இப்பாலிடெக்னிக் கல்லூரியின் முதல்வர் கே.பி.வெள்ளியங்கிரி, துணைமுதல்வர் முனைவர் ஜி.ரோஜா, முதன்மையர் ஜி.இராஜாராமன், துறைத் தலை வர்கள், நாட்டு நலப்பணித் திட்ட அலுவலர்கள் ஜி.செங்கொடி, ஆர்.நடராஜன், பி.மாதவன், பேராசிரியர்கள் மற்றும் மாணவ மாணவிகள் ஆகியோர்கள் கலந்து கொண்டனர்.
