தி.மு.க. வெற்றியில் ‘‘தீர்மானமாகவே’’ இருப்போம்!

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

‘சுயமரியாதை இயக்கம், திராவிடர் கழகம் நிறைவேற்றிய தீர்மானங்கள் என்பவை வெறும் சம்பிரதாயமானவையல்ல! காலத்தை வென்று நிற்பவை! இன்னும் சொல்லப் போனால் எதிர்காலத்தில் அரசுகளால் சட்டமாக்கப்பட்டவை!

அந்த வகையில் நேற்று (18.12.2025) சென்னை பெரியார் திடலில் நடிகவேள் எம்.ஆர். ராதா மன்றத்தில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் மானமிகு கி. வீரமணி அவர்களின் தலைமையில் நடைபெற்ற திராவிடர் கழக சிறப்புத் தலைமைச் செயற் குழுக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் சிறப்புக்குரியவை – மக்களின் கவனத்துக்குரியவை.

2026ஆம் ஆண்டு தமிழ்நாடு சட்டப் பேரவைக்கு நடைபெறவிருக்கும் தேர்தலில், திராவிட மாடல் அரசை நடத்திக் கொண்டிருக்கும் தி.மு.க. தலைமையிலான அரசே மீண்டும் தமிழ்நாட்டில் மலர வேண்டும் – மக்கள் பெருவாரியாக வாக்களித்து தங்களின் வளர்ச்சிக்கான கடமையைச் செய்ய வேண்டும் என்று கூறும் தீர்மானமாகும்.

இந்தியாவின் பல பாகங்களில் – பல மாநிலங்களில் பா.ஜ.க. என்னும் பாசிசப் பாம்பு படமெடுத்து ஆடுகிறது. மதவாத, ஜாதியவாத நஞ்சைக் கக்கிக் கொண்டிருக்கிறது.

இது மக்களைப் பிளவுபடுத்தி – கலவரச் சூழலை உருவாக்கும் அபாயகரமான போக்காகும். ‘இந்தப் பாசிச சித்தாந்தத்திற்கு நேரடியான விஷமுறிவு தந்தை பெரியாரின் சுயமரியாதை திராவிட சித்தாந்தமே’ என்று அறுதியிட்டுக் கூறும் தீர்மானம் – அந்தத் திராவிட சித்தாந்தத்துடன் சமூக நீதிக்கான சரித்திர நாயகர் மானமிகு மாண்புமிகு  மு.க.ஸ்டாலின் அவர்களின் தலைமையிலான முற்போக்கு திராவிட மாடல் மக்கள் நல அரசை தமிழ்நாட்டில் மீண்டும் மலரச் செய்ய வேண்டியது, தமிழ்நாட்டு வாக்காளப் பெருமக்களின் முழுமுதற் கடமை என்பதைத் தீர்மானம் முத்தாய்ப்பாகக் கூறுகிறது; அதற்காகத் திராவிடர் கழகம் கடுமையாக உழைக்கும் என்று தீர்மானம் உறுதியோடு பறைசாற்றுகிறது.

‘திராவிடர் கழகம் அரசியல் கட்சி அல்லவே – அதற்கு ஏன் இந்த அக்கறை?’ என்று அரைவேக்காட்டுத்தனமாக சிந்திப்பவர்கள் இருக்கலாம்.

‘திராவிடர் கழகம் அரசியல் கட்சி அல்ல’ என்பது நூற்றுக்கு நூறு உண்மைதான். ‘ஊராட்சி மன்ற உறுப்பினர் தேர்தலில்கூடப் போட்டியிடாத இயக்கம்!’ – என்பது அதைவிடப் பெரிய உண்மைதான்.

அதே நேரத்தில் ‘இராமன் ஆண்டால் என்ன, இராவணன் ஆண்டால் என்ன’ என்று பொறுப்பற்று நடைபோடும் கட்சியல்ல இது! – ‘மக்களுக்காக எந்த ஆட்சி வர வேண்டும்’ என்று தீர்மானிக்கும் ஓர் இயக்கமாகும்.

சம்பூகன் ‘சூத்திரன்’ என்ற காரணத்தால்  வெட்டிக் கொன்ற இராமனின் வருணாசிரம கொள்கையுடைய பிஜேபி என்னும் பாசிச ஆட்சி எந்தக் காரணத்தை முன்னிட்டும்  தந்தை பெரியாரின் திராவிட மண்ணில் கால் பதிக்க இடம் அளிக்கக் கூடாது – அதற்காக  எந்த விலையும் கொடுக்கும் – அரசியல் எந்தத் திசையில் பயணிக்க வேண்டும் என்று திசை காட்டும் பொறுப்பை தன் தோளின் மேல் போட்டுக் கொண்டு அயராது உழைக்கும் இயக்கமே திராவிடர் கழகம்!

பெரியார் படைப்புகளை 21 உலக மொழிகளில் பதிப்பிட்டு, புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் கூறினாரே, ‘தந்தை பெரியாரின் மண்டைச் சுரப்பை உலகு தொழும்’ என்று – அந்தப் பெரியாரின் கொள்கையை உலகமயமாக்கும் ஆட்சிக்கு மறுபெயர்தான் திராவிட மாடல் ஆட்சியாம் – தி.மு.க. தலைமையிலான ஆட்சி என்பதை மறந்து விடக் கூடாது.

விபீடணர்கள் எந்தக் காலத்திலும் இருந்தே வந்திருக்கிறார்கள் – இப்பொழுதும் இருந்து கொண்டே தான் இருக்கிறார்கள்.

அவர்களையும் சேர்த்து, ஒட்டு மொத்தமாக பிஜேபி என்னும் பாசிச ஆட்சியின் ஆணி வேரையே வெட்டித் தூக்கி எறியும் கடமையை தந்தை பெரியாரின் திராவிடப் பூமியாம் தமிழ்நாடு செய்து, இந்தியாவுக்கே வழிகாட்டப் போகிறது என்பதில் எள்ளளவும் அய்யமில்லை.

கருஞ்சட்டைத் தோழர்களே, களத்தில் இறங்குவீர், கடமையை ஆற்றுவீர்!

இதுவரை காணாத பெரு வெற்றியை தி.மு.க.வுக்கு கிடைக்கச் செய்ய உழைப்பீர்! உழைத்துக் கொண்டே இருப்பீர்! என்பதுதான் சிறப்புத் தலைமைச் செயற்குழுவின் முக்கிய தீர்மானத்தின் சாரமாகும்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *