கோவை,நவ.7- கோவை சுந்தாரபுரம் அருகில் உள்ள காமராஜர் நகர் கண்ணப்பன் அரங்கில் 05.11.2023 அன்று காலை 11 மணியளவில் மாவட்ட தலைவர் ம.சந்திரசேகர் தலைமையில் திராவிடர் கழக கலந்துரையாடல் கூட்டம் நடைபெற்றது.
இந்நிகழ்விற்கு கோவை மாவட்ட செயலாளர் க.வீரமணி, மாநகர தலைவர் தி.க.செந்தில் நாதன் ஆகியோர் முன்னிலை வகித்தனர்.
பொதுக்குழு உறுப்பினர் பழ.அன்பரசு, கோவை மாநகர செயலாளர் ச.திராவிடமணி, மாவட்ட துணை தலைவர் மு.தமிழ்செல்வம், மாவட்ட துணை செயலாளர் தி.க.காளிமுத்து, தொழிலாளர் அணி செயலாளர் வெங்கடாசலம், வடக்கு பகுதி செயலாளர் கவி கிருஷ்ணன், கிழக்கு பகுதி செயலாளர் இல.கிருஷ் ணமூர்த்தி, இளைஞரணி பொறுப் பாளர்கள் இரா.சி.பிரபாகரன், தா.செ.மதியரசு, மற்றும் ஆட்டோ சக்தி, பா.ஆனந்த, ச.செல்வகுமார், சா.ராசா, ந.குரு, ஆவின் சுப்பையா, கோபாலகிருஷ்ணன் மற்றும் பெரி யார் புத்தக நிலையம், ஜி.டி.நாயுடு நினைவு பெரியார் படிப்பகக் காப் பாளர் அ.மு.ராஜா உள்ளிட்ட கழக தோழர்கள் பங்கேற்று தங்கள் கருத்துகளை எடுத்துக் கூறினார்கள்.
நிறைவாக தெற்கு பகுதி செய லாளர் தெ.குமரேசன் நன்றி கூறினார்.
திராவிடர் கழகம் சார்பில் கோவையில் நவம்பர் 26ஆம் தேதி நடைபெற உள்ள வைக்கம் போராட்ட நூற்றாண்டு விழா, முத்தமிழ் அறிஞர் கலைஞர் நூற்றாண்டு விழா, சமூக நீதி பாதுகாப்பு பரப்புரை பொதுகூட்டத்தில், தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் பங்கேற்று சிறப்புரையாற்றுகிறார். இந்த பொதுக்கூட்டத்தை கோவை மாவட்ட திராவிடர் கழகம் சார்பில் மிகச் சிறப்பாக நடத்துவது என் றும், நவம்பர் 26 கோவை வருகை தரும் தகைசால் தமிழர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் அவர் களுக்கு மாவட்ட திராவிடர் கழகத்தின் சார்பில் மிகச்சிறப்பாக வரவேற்பு அளிப்பது எனவும், தமி ழர் தலைவர் ஆசிரியர் அவர் களிடம் விடுதலை நாளிதழ் சந்தா சேகரித்து வழங்கிட கழக தோழர் கள் அனைவரையும் கேட்டுக் கொள்கிறது எனவும் கலந்துரை யாடலில் தீர்மானங்கள் நிறை வேற்றப்பட்டன.