

தோப்பூர், டிச. 16- தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் – தோப்பூரில் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்களின் பிறந்த நாள் விழா, வாழ்வியல் சிந்தனைகள் பாகம் – 19, சுயமரியாதை இயக்க நூற்றாண்டு சிந்தனைகள் – உலகம் கண்டதுண்டா இப்படியோர் இயக்கத்தை? நூல்கள் வெளியீடு 15.12.2025 அன்று மாலை ஆறுமணிக்கு திருச்செந்தூர் ஒன்றியம் தோப்பூர் சேகுவாரா குடிலில் எழுச்சியோடு நடைபெற்றது.
ஒன்றிய கழகத்தலைவர் து.கவுசிக் வரவேற்று உரையாற்றினார். கழகக் காப்பாளர் மா.பால்இராசேந்திரம் தலைமை வகித்து ஆசிரியர் அவர்களின் பேராற்றலை விளக்கி உரையாற்றினார்.
கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன் தொடக்கவு ரையாற்றினார். நூல்களை வெளியிட்டு விசிக வின் மேனாள் மண்டல செயலாளர் சுயமரியாதை வீரர் சொ.சு.தமிழினியன் தமிழர் தலைவர் அவர்களின் பண்புநலன்களை எடுத்துக்காட்டி உரையாற்றினார்.
நிறைவாக திராவிட மாணவர் கழக மாநில துணைச்செயலாளர் தேவ.நர்மதா தந்தை பெரியார், தமிழர் தலைவர், அன்னை மணியம்மையார் ஆகியோரின் தொண்டறத்தை விளக்கி உரை நிகழ்த்தினார்.
நிகழ்வில் மாவட்டச் செயலாளர் கோ.முருகன் ,மாவட்டப.க.செயலாளர் திருவைசொ.பொன்ராஜ், திமுக கலை இலக்கிய அணி மோ.அன்பழகன், தூத்துக்குடி மாநகரதலைவர்த.பெரியார் தாசன், கி.கோபால்சாமி, தோப்பூர் கழக தோழர்கள் பெருந்திரளாக பங்கேற்று சிறப்பித்தார்கள்.
