புதினுக்கு ‘மோடி’ கொடுத்த கீதை இந்தியாவுக்குப் பெருமை சேர்க்குமா?

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புதின், இரு நாள் அரசுமுறைப் பயணமாக இந்தியாவுக்கு வருகை தந்து, டில்லியில் நடைபெற்ற 23-ஆவது இந்தியா-ரஷ்யாவின் இந்த ஆண்டுக்கான உச்சிமாநாட்டில் பங்கேற்றார். நான்கு ஆண்டுகளுக்குப் பிறகு அவர் மேற்கொண்ட இந்தப் பயணம் முக்கியத்துவம் வாய்ந்ததாக கூறப்படுகிறது.

புதின் தனது பயணத்தின்போது, டில்லியில் உள்ள ராஜ்காட்டில் இருக்கும்  காந்தியார் நினைவிடத்தில் மலர்தூவி மரியாதை செலுத்தினார். மேலும் அங்கு வைக்கப்பட்டிருந்த பார்வையாளர் புத்தகத்திலும் அவர் கையெழுத்திட்டார்.

இந்தியப் பயணம் குறித்து அய்ரோப்பிய ஊடகம் ஒன்றுக்குப் பேட்டியளித்த ரஷ்ய அதிபர் புதின், இந்தியாவின் ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்ற பண்பை வியந்து பாராட்டியதுடன், அதன் முக்கியத்துவத்தையும் எடுத்துரைத்தார். அவர் தெரிவித்ததாவது:

“சில நாட்களுக்கு முன் நான் இந்தியா சென்றேன். சுமார் 150 கோடி மக்கள் வசிக்கும் அந்த நாட்டில், அனைவரும் ஹிந்தி பேசுவதில்லை. 50-60 கோடி மக்களைத் தவிர, மற்றவர்கள் வெவ்வேறு மொழிகளைப் பேசுகின்றனர். அங்கே ஒரு மொழி பேசும் மக்கள் குறித்து இன்னொரு மொழி பேசும் மக்களுக்குத் தெரியாது. ஆனால், இந்த ஒற்றுமையையும் பன்முகத்தன்மையையும் பாதுகாப்பது மிகவும் அவசியம்”எனத் தெரிவித்தார்.

ஒன்றிய அரசின் மொழிக் கொள்கையால் இந்தியாவில் குழப்பம் உள்ளது என்பதுதான் உண்மை! இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமை என்பது   ஒரு பொய்ப் பிரச்சாரமே! இந்நிலையில் பிரதமர் நரேந்திர மோடி, புதினுக்கு ‘கீதை’யின் பிரதிகளைப் பரிசளித்துள்ளார்.

‘கீதை’ என்பது வருணாசிரம தருமத்தை வலியுறுத்துகிறது. வருண தருமம் பிறப்பின் அடிப்படையிலானது.

‘‘நான்கு வருணத்தையும் நான்தான் படைத்தேன் என்றாலும், நானே நினைத்தாலும் அதை மாற்ற முடியாது’’ என்று கிருஷ்ணன் கூறுவதாக கீதை கூறுகிறது.

‘வருணம்’ என்பது ‘வேற்றுமையில் ஒற்றுமை’ என்பதற்கு எதிரானது. ஆனால் ரஷ்ய அதிபர் புதினோ இந்தியாவில் வேற்றுமையில் ஒற்றுமைப் பற்றி சிலாகித்துக் கூறுகிறார். அவருக்குத் தவறான தகவல் கூறப்பட்டிருக்கலாம்.

வெளிநாடுகளுக்குச் செல்லும் போதெல்லாம் ‘கீதை’யைப் பரிசளிப்பதை ஒரு வழமையாக இந்திய ஆட்சியாளர்கள் கொண்டுள்ளனர்.

‘கீதை’யை பரிசாக பெற்றவர்கள், அந்த நூலை படிப்பதில்லை; மொழி தெரியாததும் ஒரு காரணமாக இருக்கலாம். தெரிந்திருந்தால் ‘கீதை’யின் வண்டவாளம் சந்தி சிரித்திருக்கும்.

‘சூத்திரர்களும், வைசியர்களும் பெண்களும் பாவ யோனியில் பிறந்தவர்கள்’ என்று கீதையில் கூறப்பட்டு இருப்பதை வெளி நாட்டினர் படித்துத் தெரிந்துகொண்டால். இந்தியாவின் கலாச்சாரம் இவ்வளவுக் கேவலமானதா என்றுதான் அருவருப்பார்கள்.

அமெரிக்காவின் அதிபராக இருந்த ஒபாமா   இந்தியா வந்தார். சுற்றுப் பயணம் முடிந்து, அவருக்கு வழியனுப்பும் விருந்து நிகழ்ச்சியில் பிரதமர் மோடியைப் பக்கத்தில் வைத்துக் கொண்டு அமெரிக்க அதிபர் ஒபாமா ஒரு கருத்தை வலியுறுத்திக் கூறினார். இந்தியா மதச்சார்பற்ற கொள்கையில் உறுதியாக இருந்தவரை சிறப்பாகவே இருந்திருக்கிறது என்றார். அவர் அப்படி சொன்னதற்கான பொருள் பிரதமர் நரேந்திர மோடிக்குத் தெரியாதா?

தெரிந்தும் என்ன பயன்? ஆர்.எஸ்.எஸ். கட்டளை என்ற ஒன்று இருக்கிறதே! மேலும் மோடியும்
ஆர்.எஸ்.எஸில் பயிற்சி பெற்றவராயிற்றே!

புதினுக்குக் ‘கீதை’யைப் பரிசாகக் கொடுத்தது – இந்தியாவிற்கு மாபெரும் தலைக்குனிவுதானே!

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *