தேசிய அளவிலான ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி
வல்லம், டிச. 14– வல்லம் பெரியார் மணியம்மை அறிவியல் மற்றும் தொழில்நுட்ப நிறுவனம் நிகர்நிலைப் பல்கலைக்கழகமும் தஞ்சாவூர், ஏஅய்சிடிஇ-ஏடிஏஎல் (AICTE-ATAL) அகாடமி இணைந்து நடத்திய ஒரு பாரத்திற்கான அடித்தளம் (Foundation AI for Bharath : Building Large Language & Mulitimodel Models for Indian Contexts) என்ற பொருண்மையில் டிசம்பர் 01.12.2025 முதல் 06.12.2025 வரை தேசிய அளவிலான ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி நடைபெற்றது.
இந்நிகழ்ச்சிக்கு பல்கலைக் கழகத் துணைவேந்தர் பேரா வெ.இராமச்சந்திரன் நிகழ்ச் சியை துவக்கி வைத்து உரை யாற்றினார்.
செயற்கை நுண்ணறிவு
அவர் தமது உரையில் இந்தி யாவில் செயற்கை நுண்ணறிவு துறை என்பது வளர்ந்து வருகின்ற ஒரு துறையாகும். இந்த துறையின் அறிவியல் பூர்வமான கருத்துகளையும், செயற்கை நுண்ணறிவு நுட்பத்தினையும் மேம்படுத்தும் சமூக மாற்றத்திற்கான ஒரு துறையாகும் என்று பல்வேறு கருத்துகளை விளக்கமாக எடுத்துரைத்தார்.
சமூகத் தேவைகளை…
இதனை தொடர்ந்து இந்த பயிற்சியின் மூலம் பயனாளர்களுக்கு திட்டத்தின் நோக்கம் குறித்தும் கூறினார். இந்தியாவின் செயற்கை நுண்ணறிவு இந்திய மொழிகள், கலாச்சார பல்வகைமை சமூகத் தேவைகளை முன்னெடுத்துச் செல்லும் என கூறினார்.
ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தை ஒரு கருவியாக பார்க்காமல் சமூக பொறுப்பு, நெறிமுறை உள்ளடக்கம், இந்திய கலாச்சார புதுமைகளை இணைக்கும் ஒரு முக்கிய கருவியாக உள்ளது.
மேம்பாட்டுப் பயிற்சி
இந்தியாவின் ஒவ்வொரு குடிமகனுக்கும் செயற்கை நுண்ணறிவு சென்றடைய கல்வி, சுகாதாரம், நிர்வாகம் ஆகிய துறைகளில் பல்நோக்கு செயல் நுண்ணறிவு மாற்றங்களை உருவாக்கும். மேலும் நுண்ணறிவு சார்ந்த கருத்துகளையும், சிந்த னைகளையும், புதுமையையும் உருவாக்கும் நோக்கத்தில் புதிய தலைமுறையினருக்கும் இந்த விழிப்புணர்வு நாடு அளவில் ஏற்படுத்தும் நோக்கத்தில் ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி பயன்படுகிறது.
தேசிய அளவில் நடைபெற்ற ஆசிரியர் மேம்பாட்டுப் பயிற்சி ஒன்றிய பிரதேசகங்களை சேர்ந்த தமிழ்நாடு அரியானா, கருநாடகா, கேரளா, மகாராட் டிரா, குஜராத், மத்தியபிரதேசம், தெலங்கானா ஆந்திரப்பிரதேசம், புதுச்சேரி, ஒடிசா, மேற்குவங்கம், உத்தரகாண்டம், டில்லி, உத்திரப் பிரதேசம், பஞ்சாப் போன்ற நாடுகளிலுள்ள 204 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் ஆர்வமாகவும், உற்சாகமாகவும் செயற்கை நுண்ணறிவு திறமைப் பற்றி வெளிப்படுத்தினார்.
மேலும் எதிர்கால திட்டமாக செயற்கை நுண்ணறிவு வளர்ச்சி பயணத்தில் நாம் முன்னேற வேண்டும் என்ற நோக்கத்திலும் இந்த கருத்தரங்கம் சிறப்பாக நடைபெற்றது.
இந்த நிகழ்ச்சியை பேராசிரியர் முனைவர் எஸ்.அப்பாவு என்ற பாலமுருகன் கணினி அறிவியல் மற்றும் பொறியியல் துறை பேராசிரியர், முனைவர் எஸ்.ஜனனி மின்னணுவியல் மற்றும் தகவல் தொடர்பு பொறியியல் துறை ஆகியோர் ஒருங்கிணைத்தனர்.
