பன்னாட்டு ஊடக சுதந்திரக் குறியீடு: 161ஆவது இடத்திற்கு சரிந்த இந்தியா

2 Min Read

அரசியல்

பாரீஸ்,மே 3- பன்னாட்டு ஊடக சுதந்திர குறியீடு தரவரிசையில் 180 நாடுகளில் இந்தியா 161ஆவது இடத் திற்கு சரிந்துள்ளது. கடந்த 2022ஆம் ஆண்டு 150ஆவது இடத்தில் இருந்த நிலையில் இந்த ஆண்டு இந்தியாவின் ஊடக சுதந்திர நிலை சரிந்துள்ளது. பாகிஸ்தான், இலங் கையைவிட இந்தியா பின் தங்கி யுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

பன்னாட்டு ஊடக செயல்பாடு களைக் கண்காணிக்கும் அமைப் பான ரிபோர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் Reporters Without Borders (RSF)  ஆண்டுதோறும் உலக நாடுகளின் ஊடக சுதந்திரம் பற்றிய தரவரிசையை வெளியிடு வது வழக்கம்.

அந்த வகையில் 2022ஆம் ஆண்டில் 180 நாடுகளில் மேற் கொள்ளப்பட்ட ஆய்வின்படி இந் தியா 161ஆவது இட்த்தில் இருக் கிறது. பாகிஸ்தான் கடந்த ஆண்டு 157ஆவது இடத்தில் இருந்தது. இந்த ஆண்டு 150ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது. மற்றொரு அண்டை நாடான இலங்கை கடந்த 2022இல் இந்தப் பட்டியலில் 146 ஆவது இடத்தில் இருந்த நிலையில் 2023இல் 135ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

நார்டிக் தேசங்களான நார்வே, அயர்லாந்து, டென்மார்க் நாடுகள் இந்தப் பட்டியலில் முறையே முதல் மூன்று இடங்களைப் பிடித்துள்ளன. கடைசி மூன்று இடங்களில் வியட் நாம், சீனா, வட கொரியா நாடுகள் இடம்பெற்றுள்ளன.

ரிப்போர்ட்டர்ஸ் வித்தவுட் பார்டர்ஸ் என்ற அமைப்பு ஒரு பன்னாட்டு தன்னார்வ தொண்டு நிறுவனம். இது உலகம் முழுவதும் ஊடக சுதந்திரத்தை பாதுகாப்பதை தனது லட்சியமாக அறிவித்து செயல்பட்டு வருகிறது. இதன் தலைமையகம் பிரான்ஸ் தலைநகர் பாரிஸில் அமைந்துள்ளது.

பன்னாட்டு ஊடக சுதந்திர குறி யீட்டை ஆண்டுதோறும் வெளி யிட, உலக நாடுகளில் உள்ள பத் திரிகையாளர்களின் சுதந்திரத்தை ஒப்பிட்டுக் காட்டுவதே என்று இந்து அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் ஊடக சுதந்திரம் என்பது பத்திரிகை யாளர்கள் மக்கள் நலன் கருதி தகவல்களை சேகரிக்கவும், அதைப் பகிரவும் கட்டுப்பாடுகள், அழுத் தங்கள் இல்லாமல் இருப்பதே என்று இந்நிறுவனம் வரையறுத் துள்ளது. அரசியல், பொருளாதாரம், சட்டம், சமூகம் என எவ்வித அழுத் தங்களும் இல்லாமல் செய்தியாளர் களின் உயிருக்கும், உடைமைக்கும் அச்சுறுத்தல் இல்லாமல் செய்தி களை மக்களிடம் கடத்தும் சுதந்தி ரமே ஊடக சுதந்திரம் எனக் கூறு கிறது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *