தஞ்சாவூர், டிச. 12- தஞ்சாவூர் நீலகிரி ஊராட்சி சரபோஜி நகரில் அமைந்துள்ள குறள் நெறியாளர் கு.பரசுராமன் நினைவு பெரியார் படிப்பகம் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி நூலகத்தின் சார்பில் ஆசிரியர் அவர்களின் 93-ஆவது பிறந்தநாள் விழா எழுச்சியோடு நடைபெற்றது.
‘வாழ்வியல் சிந்தனைகள்’ வாசகர் வட்டத் தலைவர் பி.எஸ்.ஆர்.மாதவராஜ் வரவேற் புரையாற்றினார். மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் சி.அமர்சிங் தலைமையேற்றார். வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்ட புரவலர்கள் வழக்குரைஞர் ப.பவித்திரன், பொறியாளர் ப.பாலகிருட்டினன், பூதலூர் நகர செயலாளர் ப.விசய குமார், நெல்லுப்பட்டு அ.இராமலிங்கம், திராவிட மகளிர் பாசறைத் தலைவர் அஞ்சுகம்,ஆகியோர் வாழ்த்துரை வழங்கினார்கள்.
கழகச் சொற்பொழிவாளர் இரா.பெரியார்செல்வன் தொடக்கவுரையாற்றினார்.
ஆசிரியர் அவர்கள் தொகுத்து 1957இல் தஞ்சையில் வெளியிடப்பட்ட முதல் நூலான ‘சிந்தனை திரட்டு’, ‘பணக்காரத் தன்மை ஒரு மூடநம்பிக் கையே’ என்ற நூல்களை திமுக மூத்த முன்னோடி கா.முத்துகிருட்டிணன் வெளியிட்டார் பெரியார் வீரவிளையாட்டுக் கழகத்தலைவர் கபடி.நா.இராமகிருட்டிணன் பெற்றுக்கொண்டார்.
வருகைதந்தோர் வாங்கி மகிழ்ந்தார்கள். கழகப் பொதுச் செயலாளர்.முனைவர் துரை.சந்திரசேகரன் சிறப்புரையாற்றினார் .
‘வாழ்வியல் சிந்தனைகள்’ வாசகர் வட்டச் செயலாளர் அழகு.ஆ.இராமகிருட்டிணன் நன்றியுரையுடன் நிறைவுபெற்றது. நிகழ்வில் திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் உரத்தநாடு இரா.குணசேகரன், திராவிட மாணவர் கழக மாநிலச் செயலாளர் இரா.செந்தூர பாண்டியன், மாநகரச் செயலாளர் இரா.வீரக்குமார், மாவட்ட ப.க.தலைவர் ச.அழகிரி, உரத்தநாடு தெற்கு ஒன்றியச் செயலாளர் மாநல்.பரமசிவம், உரத்தநாடு தெற்கு ஒன்றியத் தொழிலாளர் அணி தலைவர் தன்மானம், மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் ச.சந்துரு வாழ்வியல் சிந்தனைகள் வாசகர் வட்டப் பொருளாளர் பேரா.குட்டிமணி ஆகியோர் பங்கேற்று சிறப்பித்தார்கள்.
