தமிழ்நாட்டில் 23ஆம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் வானிலை மய்யம் தகவல்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.12- தமிழ்நாட்டில் 23ஆம் தேதி வரை கடும் குளிர் நீடிக்கும் என சென்னை வானிலை மய்யம் தெரிவித்துள்ளது.

இது தொடர்பாக சென்னை வானிலை நிலையம் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது: இலங்கை தெற்கில் நிலை கொண்டுள்ள காற்று சுழற்சி காரணமாக வடக்குப் பகுதியில் இருந்து காற்று தெற்குப் பகுதி நோக்கி ஈர்க்கப்படுவதால், தமிழ்நாடு ஊடாக காற்று பயணிக்கிறது. அதனால் தமிழ்நாடு மற்றும் தமிழ்நாடு கடலோரப் பகுதியில் கடும் குளிர்காற்று வீசிவருவதால், இரவு நேரங்களில் கடும் குளிர் இருக்கும். நீராவிக் காற்றைவிட குளிர் அதிகம் கடல் பரப்பில் நீடித்து வருவதால் கடும் குளிர் நிலவுகிறது. இடையிடையே மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. வெயில் வரும் போது குளிர் காற்று மாறி மழை பெய்யும். 17ஆம் தேதி கிழக்கு காற்றின் மூலம் குளிர் அலை வீசும். இமய மலைப்பகுதியில் இருந்து தெற்கு நோக்கி குளிர் காற்று வீசும்.

சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு கள்ளக்குறிச்சி, விழுப்புரம், உள்ளிட்ட மாவட்டங்களில் 16, 17, 18ஆம் தேதிகளில் லேசானது முதல் மிதமான மழை பெய்யும் வாய்ப்பும் உள்ளது. 19ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் மீண்டும் ஒரு காற்று சுழற்சி உருவாகும் என்று எதிர்பார்க்கப்படுவதால், மீண்டும் குளிர் காற்று வீசத் தொடங்கும். அதுவரையில் இலங்கை காற்று சுழற்சியானது, குளிர் காற்றை கட்டுப்படுத்தி வைத்திருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேற்கு பகுதியில் நிலை கொண்டுள்ள சுழற்சியின் காரணமாகவும் குளிர் காற்று வீசும். அத்துடன் 19ஆம் தேதி முதல் 23ஆம் தேதி வரை குளிரை ஈர்க்கும் சுழற்சியும் தென் அரைக்கோளத்தில் உருவாகும் என்பதால் அப்போதும் குளிர் காற்று கடுமையாக இருக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.

தமிழ்நாட்டில் 80 லட்சம் வாக்காளர்கள்  நீக்கம்?

அதிர்ச்சி தகவல்

எஸ்.அய்.ஆர். படிவங்களை  சமர்ப்பிக்க நாளை  மறுநாள் 14.12.2025 கடைசி  நாளாகும். வரும்
19-ஆம் தேதி வரைவு வாக்காளர்கள் பட்டியலை  தேர்தல் ஆணையம் வெளியிட உள்ளது. அதில், இறந்தவர்கள் 27 லட்சம், இடம் மாறியவர்கள் 40 லட்சம், இரட்டைப் பதிவு 4 லட்சம் என சுமார் 80 லட்சம் வாக்காளர்களின் பெயர்கள் பட்டியலிலிருந்து நீக்கப்படலாம் எனத் தகவல் தெரிய வருகிறது. உங்கள் பெயர் வரைவு வாக்காளர் பட்டியலில் விடுபட்டிருந்தால் டிச.19 முதல் ஜன.18 வரை விண்ணப்பிக்கலாம்.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *