தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 6 சதவீதம் அதிகம் சென்னை வானிலை ஆய்வு மய்யம்

1 Min Read

சென்னை, டிச.12 தமிழ்நாட்டில் இதுவரை வடகிழக்கு பருவமழை இயல்பை விட 6 சதவீதம் அதிகம் பெய்துள்ளது என்று சென்னை வானிலை ஆய்வு மய்யம் தெரிவித்துள்ளது. இது குறித்து வானிலை ஆய்வு மய்ய செய்திக் குறிப்பில்.

வடகிழக்கு பருவமழை காலத்தில் இயல்பான நிலையில் 398.3 மிமீ மழை பெய்ய வேண்டும். அக்டோபர் 1 முதல் டிசம்பர் 11 (நேற்று) வரை 420.9 மிமீ மழை பெய்துள்ளது. 6 சதவீதம் மழை கூடுதலாக பெய்துள்ளது. சென்னை மாவட்டத்தில் வடகிழக்கு பருவமழை இன்று வரை இயல்பை விட 2 சதவீதம் குறைவாக பெய்துள்ளது.

சென்னையில் இயல்பான நிலையில் 731.9 மிமீ மழை பெய்யும் நிலையில், இன்று வரை 715.1 மிமீ மழை மட்டுமே பெய்துள்ளது. மதுரையில் இயல்பான மழை அளவு 337.7மிமீ , பதிவான மழை 350.5மிமீ 4 சதவீதம் அதிகம். கோவையில் இயல்பான மழை அளவு 315.1மிமீ , பதிவான மழை 280.4மிமீ, 11 சதவீதம் குறைவு என்று குறிப்பிட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *