7 மாவட்டங்களில் ரூ.332 கோடியில் 10 நெல் சேமிப்பு வளாகங்கள் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, டிச.12 தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில், 7 மாவட்டங்களில் ரூ.332.46 கோடியில் 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டுவ தற்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின்  காணொலி வாயிலாக அடிக்கல் நாட்டினார்.

இதுகுறித்து தமிழ்நாடு அரசு  வெளியிட்ட செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:

தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் மூலம் சேமிப்புக் கிடங்குகளை அதிகரித்து உணவு தானியங்களை நவீன முறையில் சேமித்து வைக்க அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொது விநியோகத் திட்டத்துக்கு தானியங்களின் சேமிப்பு கொள்ளளவை அதிகப்படுத்த, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகத்தின் சார்பில் நாமக்கல் மாவட்டம், சேந்தமங்கலத்தில் ரூ.4.97 கோடியில் 2,000 டன் கொள்ளளவு, நீலகிரி மாவட்டம், பந்தலூர், திருவண்ணாமலை மாவட்டம் கீழ்பெண்ணாத்தூரில் தலா ரூ.4.50 கோடியில் 2,500 டன் கொள்ளளவுடன், வட்ட செயல் முறை கிடங்குகள் கட்டி முடிக்கப்பட்டுள்ளன. மொத்தம் ரூ.13.97 கோடியில் 7,000 டன் கொள்ளளவில் கட்டி முடிக்கப்பட்டுள்ள 3 வட்ட செயல் முறை கிடங்கு வளாகங் களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்  காணொலி வாயிலாக திறந்து வைத்தார்.

நவீன நெல் சேமிப்பு வளாகங்கள்

விவசாயிகளின் கடின உழைப்பில் உற்பத்தியாகி கொள்முதல் செய்யப்படும் “ஒரு நெல்மணி கூட வீணாகக் கூடாது” என்ற முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உத்தரவுக்கிணங்க மேற்கூரை அமைப்புடன் கூடிய நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் நிறுவப்பட்டு வருகின்றன. அதன்படி தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழகம் சார்பில் டெல்டா மாவட்டங்களான தஞ்சாவூர் மாவட்டம், ஒரத்தநாடு வட்டம், நடுவூர் கிராமத்தில் ரூ.170.22 கோடியில் ஒரு லட்சம் டன் கொள்ளளவிலும், நாகப்பட்டினம் மாவட்டம், திருக்கண்ணபுரம் கிராமத்தில் ரூ.29.02 கோடியில் 20,500 டன் கொள்ளளவிலும், திருக்குவளை வட்டம், மணக்குடி கிராமத்தில் ரூ.22.95 கோடியில் 17,000 டன் கொள்ளளவிலும், மயிலாடுதுறை மாவட்டம், பரசலூர் கிராமத்தில் ரூ.12 கோடியில் 9,000 டன் கொள்ளளவிலும், தரங்கம்பாடி வட்டம், வில்லியநல்லூர் கிராமத்தில் ரூ.27 கோடியில் 21,000 டன் கொள்ளளவிலும் நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டப் பட உள்ளன.

9,000 டன்கொள்ளளவில்

அதே போல், கடலூர் மாவட்டம், வேப்பூர் வட்டம், டி.புடையூர் கிராமத் தில் ரூ.12.66 கோடியில் 9,500 டன் கொள்ளளவிலும் மற்றும் திட்டக்குடி வட்டம், தாழநல்லூர் கிராமத்தில் ரூ.15 கோடியில் 11,000 டன் கொள்ளளவிலும், திருவண்ணாமலை மாவட்டம், மேல்பெண்ணாத்தூர் வட்டம், செங்கம் கிராமத்தில் ரூ.17.91 கோடியில் 12,000 டன் கொள்ளளவிலும், திண்டுக்கல் மாவட்டம், பழனி வட்டம், கோவிலம்மாபட்டி கிராமம், கிருஷ்ணகிரி மாவட்டம், ஜூஜூப்பள்ளி கிராமத்தில் தலா ரூ.12.85 கோடியில் 9,000 டன் கொள்ளளவிலும் என மொத்தம் 2.18 லட்சம் டன், ரூ.332.46 கோடியில் மேற்கூரை அமைப்புடன் கூடிய 10 நவீன நெல் சேமிப்பு வளாகங்கள் கட்டும் பணிகளுக்கு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார்.

இந்த நிகழ்ச்சியில், அமைச்சர்கள் அர.சக்கரபாணி, கோவி.செழியன், தலைமைச் செயலர் நா.முருகானந்தம், உணவுத் துறை செயலர் சத்யபிரத சாஹூ, தமிழ்நாடு நுகர்பொருள் வாணிபக் கழக மேலாண் இயக்குநர் ஆ.அண்ணாதுரை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.இவ்வாறு அரசு வெளியிட்ட அறிக்கையில் தெரி விக்கப்பட்டுள்ளது.

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *