அரியானா பிஜேபி ஆட்சியில் மாணவிகள் மீதான வன்கொடுமை

2 Min Read

அரியானாவின் ஜிந்த் மாவட்டத்தில் அரசுப் பள்ளி ஒன்று செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியின் தலைமையாசிரியர் 60 மாணவிகளை மிரட்டி பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். இது தொடர்பாக உள்ளூர் காவல்நிலையத்தில் மாணவிகள் சார்பில் புகார் அளிக்கப்பட்டது. ஆனால் அந்தப் புகார்மீது நடவடிக்கை எடுக்காமல் பள்ளி முதல்வரை அழைத்து கண்டித்ததோடு தனது கடமை முடிந்துவிட்டதாக காவல்துறை நினைத்துவிட்டது. 

இதனால் மீண்டும் பள்ளிக்கு வந்த தலைமை ஆசிரியர் தன் மீது புகார் அளித்த மாணவிகளை கடுமையாக நடத்தியுள்ளார்.

மேலும் அனைவரையும் தேர்வில் தோல்வியடைய வைத்துவிடுவேன் என்றும் மிரட்டியுள்ளார். காவல்துறையினர் புகார் மீது நடவடிக்கை எடுக்காமல் கட்டப்பஞ்சாயத்து வேலையில் ஈடுபட்ட காரணத்தால் மாணவிகள் குடியரசுத்தலைவர், பிரதமர் மற்றும் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதிக்கு புகார் கடிதம் எழுதினர்.

உடனடியாக இந்தப் புகார் குறித்து விசாரணை நடத்த அரியானா மாநில காவல்துறை இயக்குநருக்கு பரிந்துரை செய்யப்பட்டது.  இதனைத் தொடர்ந்து அக்டோபர் 31-ஆம் தேதி குற்றம் சாட்டப்பட்டவருக்கு எதிராக போக்சோ மற்றும் அய்.பி.சி. 354-ஆவது பிரிவின் கீழ் உச்சனா காவல்துறையினர் வழக்குப் பதிவு செய்தனர்.

கடந்த சில நாட்களாக தலைமறைவாக இருந்த குற்றம் சாட்டப்பட்ட பள்ளி முதல்வர், மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் அமித் பாட்டியா தலைமையிலான குழுவினரால் கைது செய்யப்பட் டுள்ளார். அவரை  நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி யுள்ளனர்.

 ஒரு தலைமை ஆசிரியர் 60 மாணவிகளை பாலியல் வன்கொடுமை செய்துள்ளார். மாண விகள் காவல் நிலையத்தில் புகார் அளித்தும் அது தொடர்பாக நடவடிக்கை எடுக்காமல் பஞ்சாயத்து செய்த காவல்துறையின் நடவடிக் கையும் மாநிலத்தை ஆளும் பாஜக அரசின் மெத்தனப்போக்கும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தி உள்ளது. 

 இந்தியாவிலேயே மிகவும் குறைவான அளவே பள்ளிக்குச் செல்லும் நிலை அரியானா மாநிலத்தில்தான் உள்ளது, இதனால் தான் அந்த மாநிலத்தில் “பெண் குழந்தையை காப் பாற்றுங்கள், பெண் குழந்தையை படிக்க வையுங்கள்”  (பேட்டி பச்சாவ் பேட்டி படாவ்) என்ற திட்டத்தை மோடி 2015 ஆம் ஆண்டு துவங்கினார். 

ஆனால், அங்கே மாணவிகளை தலைமை ஆசிரியரே பாலியல் வன்கொடுமை செய்த கொடுமையும், அதை கண்டு கொள்ளாமல் கட்டப் பஞ்சாயத்து செய்த காவல்துறை மற்றும் இது தொடர்பாக கண்டுகொள்ளாமல் இருந்த மனோகர்லால் கட்டார் தலைமையிலான பாஜக அரசும் ஆட்சி நடத்தவே தகுதியில்லாமல் போய்விட்டன.

இந்தக் கேவலமான செய்தி வெளியுலகுக்குப் பரவுமேயானால் மோடி கூறும் ‘பாரத்’தைப் பற்றி என்ன நினைப்பார்கள்?

பெண் என்றால் போதைப் பொருள் – காமப் பசியைப் போக்கும் பண்டம் என்ற மனப்பான்மை இந்தப் பாழாய்ப் போன பாரத புண்ணிய நாட்டின் சித்தாந்தமோ!

60 மாணவிகளை ஒரு தலைமை ஆசிரியர் பாலியல் வன்கொடுமை செய்திருக்கிறார் எனறால், அதன்மீது பிஜேபி ஆட்சியின் காவல்துறை கட்டப்பஞ்சாயத்து நடத்தி, பிரச்சினையை முடித்து வைக்கிறது என்றால், பிஜேபி ஆட்சியின் ஆபாச அவலத்தை புரிந்து கொள்ளலாம்.

இதனை அலட்சியமாகக் கடந்து செல்ல முடியாது. நாடு தழுவிய அளவில் கடும் கண்டனத்தை எழுப்பிட வேண்டும்.

மக்கள் மத்தியில் விழிப்புணர்வு, தேவை – கண்டிப்பாகத் தேவை!!

பெண்கள் விபச்சார தோஷம் உடையவர்கள் என்று கூறும் மனுதர்ம சாஸ்திரத்தை இன்றளவும் காப்பாற்றும் ஒரு நாட்டில் என்னதான் நடக்காது? வெட்கக் கேடு! அசல் வெட்கக் கேடு!!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

சிறிய தொகை, பெரிய தொகை – அனைத்தும் மதிப்புமிக்கது. நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும்.

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *