சென்னை, டிச. 11- விளையாட்டுத் துறையை ஊக்குவிப்பதில் சிறந்து விளங்கும் மாநிலமாக அங்கீகரித்து தமிழ்நாட்டிற்கு இந்திய தொழில் கூட்டமைப்பு (சிஅய்அய்) விருது வழங்கி சிறப்பித்துள்ளது
வர்த்தக விருது
இந்திய தொழில் கூட்டமைப்பு சார்பில் விளையாட்டுத் துறையில் சிறந்து விளங்கும் சாதனையாளர்களை அங்கீகரிக்கும் வகையில் ‘சிஅய்அய் விளையாட்டு வர்த்தக விருதுகள்’ வழங்கும் நிகழ்ச்சி டில்லியில் நேற்று முன்தினம் (9.12.2025) நடைபெற்றது.
இதில், விளையாட்டுத் துறையின் வளர்ச்சிக்கு மிகச்சிறந்த பங்களிப்பை வழங்கும் மாநிலமாக தமிழ்நாடு தேர்ந்தெடுக்கப்பட்டு அதற்கான விருதை, தமிழ்நாடு அரசின் விளையாட்டுத் துறைச் செயலர் அதுல்ய மிஸ்ரா பெற்றுக் கொண்டார். தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணைய உறுப்பினர் செயலர் ஜெ. மேகநாத ரெட்டி உடனிருந்தார்.
