தமிழர் தலைவர் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களுக்கு 93ஆவது பிறந்தநாள்!.. தமிழ்நாடு மட்டுமல்ல; உலகம் முழுவதும் உள்ள திராவிட பற்றாளர்கள், தமிழர்கள், பகுத்தறிவாளர்கள் அனைவரும் அவரது பிறந்த நாளினை கொண்டாடி மகிழ்ந்து வருகிறார்கள்!.
திராவிடம் என்ற சொல் அனைவருக்கும் பொதுவான சொல்லாக இருந்தாலும், தந்தை பெரியாருக்கு பிறகு திராவிடம் என்ற சொல் ஆசிரியர் அவர்களின் அடையாள முகவரியாக இருந்து செயல்பட்டு வருகிறது என்றால் மிகையாகாது.
தேசிய கல்விக் கொள்கை ஆபத்து என்றாலும், தாய்மொழிக்கு பாதிப்பு ஏற்பட்டாலும், தமிழ்நாடு எந்த வகையில் யாரால் வஞ்சிக்கப்பட்டாலும் 93 வயதிலும் எழுத்திலும், பேச்சிலும் களம் காண்பதை… பார்க்கும் போது நமக்கே வியப்பாக தோன்றுகிறது!..
தமிழ்நாடு முதலமைச்சர் அவர்கள் தொடங்கி திராவிட பற்றுடைய அனைத்து கட்சியை சார்ந்த தலைவர்களும் ஆசிரியர் அய்யா அவர்களை மய்யப்படுத்திதான் முதன்மைப்படுத்திதான் வாழ்த்தினை பெற்று வருகிறார்கள்!.
மூன்று முறை கரோனா பெருந்தொற்றில் பாதிக்கப்பட்ட போதும்!… பீனிக்ஸ் பறவையாக மீண்டும் எழுந்து வந்து நம் அனைவருக்கும் திசைக்காட்டியாய் விளங்குகிறார்!..
அண்ணன் அய்பெட்டோ அவர்கள் மீது தனி அன்பும் அக்கறையும், செல்லமாக பேசிப் பழகுகிற ஒரு வாய்ப்பினையும் இன்றளவும் வழங்கி வருகிறார்!.. என்பது நமக்கெல்லாம் பெருமைக்கும் பெருமையினை சேர்க்கக்கூடிய நிகழ்வாகும்.
தவிர்க்க இயலாத சூழ்நிலைகளில் அவருடைய தனி அலைபேசியில் அழைத்தால் என்ன அண்ணாமலை!.. சொல்லுங்க நல்லா இருக்கீங்களா! என்று வருகிற அந்த குரல் நம் இதயத்தில் எப்போதும் ஒலித்துக் கொண்டே இருக்கிறது!..
நம்முடைய முக்கியமான புலனப் பதிவுகளை திராவிட கழக பொதுச்செயலாளர் அவரது அன்பு மகனார் சகோதரர் அன்புராஜ் அவர்கள் வழியாக இன்னமும் பார்த்து கருத்துகளை தெரிவித்து வருகிறார்கள்…
அதேபோல் ஆசிரியர் இயக்கக் குரலையும் தொடர்ந்து படித்து வருகிறார்!.. என்பதையெல்லாம் அறிந்து மட்டற்ற மகிழ்ச்சி அடைகிறோம்!..
தொண்டு செய்பவர்களுக்கு சாவு வருவதில்லை!.. என்ற பாரதிதாசன் வரிகளுக்கு ஏற்ப நூறாண்டு காலம் வாழ வேண்டும்!.. நூற்றாண்டு விழா கொண்டாட வேண்டும்!..
93ஆவது பிறந்த நாளில் நூறு ஆண்டுகள் வாழ வேண்டும்!.. நூற்றாண்டு விழா காண வேண்டும் என்று… தமிழக ஆசிரியர் கூட்டணி சார்பிலும் அய்பெட்டோ அகில இந்திய அமைப்பின் சார்பிலும் வாழ்த்தி வணங்குகிறோம்!..
சமூக நீதிக் காவலர் நீடு வாழ்க! நீடு வாழ்க!
– வா.அண்ணாமலை,
அய்பெட்டோ அகில இந்தியச் செயலாளர்
