அரியலூர், டிச. 11- அரியலூர் மாவட்ட திராவிடர் கழக கலந்துரையாடல்கூட்டம் 10.12.2025 புதன்கிழமை இரவு 7 மணியளவில் ஜெயங்கொண்டம் எழில் வணிக வளாகத்தில் நடைபெற்றது . மாநிலஒருங்கிணைப்பாளர் தஞ்சை. இரா.ஜெயக்குமார் தலைமையில் நடைபெற்ற இக்கூட்டத்தில் அரியலூர் மாவட்ட தலைவர் விடுதலை நீலமேகன் வரவேற்புரையாற்றினார். ஆசிரியர் இராஜேந்திரன் கடவுள் மறுப்பு கூறினார்.
மாவட்ட காப்பாளர் சி காமராஜ், மாவட்ட செயலாளர் மு.கோபாலகிருஷ்ணன், பொதுக்குழு உறுப்பினர்இரத்தின. ராமச்சந்திரன் மாவட்டத் துணைச் செயலாளர்கள் பொன்.செந்தில்குமார் க.கார்த்திக் ஆகியோர் முன்னிலை வகித்தனர். மாநிலப.க.அமைப்பாளர் தங்க.சிவமூர்த்தி, மாநில இளைஞரணி செயலாளர் நாத்திக.பொன்முடி, தலைமை செயற்குழு உறுப்பினர் க.சிந்தனைச் செல்வன் ஆகியோர் கூட்டத்தின் நோக்கம் குறித்து உரையாற்றினார்கள். சிறப்புரையாற்றிய மாநிலஒருங்கிணைப்பாளர் தஞ்சை. இரா.ஜெயக்குமார் இதுதான் ஆர் எஸ் எஸ்- பிஜேபி, இதுதான் திராவிடம் திராவிட மாடல் ஆட்சிபரப்புரை பயண பொதுக்கூட்டத்தை பண்பாட்டு பாதுகாப்பு பொதுக்கூட்டமாக சிறப்போடு நடத்திட வேண்டியதுதான் அவசியம் குறித்தும், பெரியார் உலகத்திற்கு இரண்டாவது கட்டமாக நிதியை திரட்டுவது குறித்தும் விளக்கி சிறப்புரையாற்றினார். உதயநத்தம் சி. தமிழ் சேகரன் நன்றி கூறினார் .
உயிர் வாழ்வதற்கு கடவுள் துணை தேவையில்லை என்று நிரூபித்து 104 வயது வரை சுயமரியாதை வாழ்வே சுக வாழ்வு என்று வாழ்ந்து மறைந்த பெரியார் பெருந்தொண்டர் ஆத்தூர் ஏ.வி தங்கவேல் அவர்களுக்கு இக்கூட்டம் ஆழ்ந்த இரங்கலையும் வீர வணக்கத்தையும் தெரிவித்துக் கொள்கிறது
எதிர்வரும் 20 ஆம் தேதி(20.12.2025) அன்று இதுதான் ஆர் எஸ் எஸ் பாஜக இதுதான் திராவிடம் திராவிட மாடல் ஆட்சி என்ற பரப்புரை பயணம் மேற்கொண்டு ஜெயங்கொண்டத்திற்கு வருகை தரும் தமிழர் தலைவருக்கு எழுச்சியான வரவேற்பு அளிப்பதெனவும் தமிழர் தலைவர் பங்கேற்கும் பண்பாட்டு பாதுகாப்பு பொதுக்கூட்டத்தை மிகுந்த சிறப்போடும் எழுச்சியோடும் நடத்திடுவதெனவும், திருச்சி சிறுகனூரில் அமைய உள்ள பெரியார் உலகத்திற்கு இரண்டாவது கட்டமாக நிதியினை திரட்டி அளிப்பதெனவும் ஒருமனதாக முடிவு செய்யப்படுகிறது .
புதிய பொறுப்பாளர்கள்
மாவட்ட தொழிலாளரணி தலைவர்: தா.மதியழகன் செந்துறை, செயலாளர்: வெ. இளவரசன் வஞ்சினபுரம், துணை தலைவர் : மா. கருணாநிதி ஜெயங்கொண்டம், துணைச் செயலாளர் வே.செந்தில் கு.வல்லம், தாபழூர் ஒன்றியம் தலைவர்: சிந்தாமணி இராமச்சந்திரன்
செயலாளர்: பி. வெங்கடாசலம் துணைத் தலைவர் இரா.இராஜேந்தி ரன், துணைச் செயலாளர்: சி. தமிழ் சேகரன், ஜெயங்கொண்டம் ஒன்றியம் தலைவர் :ஆயுதகளம் கலியபெருமாள், செயலாளர்: ஆ.ஜெயராமன், மீன்சு ருட்டி நகரம் தலைவர்:ஆ.சேக்கிழார் செயலாளர்: ரஞ்சித் குமார்
பங்கேற்றோர்
மாவட்ட வழக்கறிஞரணி அமைப் பாளர் மு.ராஜா, ஆண்டிமடம் ஒன்றிய செயலாளர் தியாக. முருகன்,, அரியலூர் ஒன்றிய தலைவர் சி சிவக் கொழுந்து, செந்துறை ஒன்றிய தலை வர் மு. முத்தமிழ் செல்வன், செயலாளர்ராசா. செல்வகுமார், தா.பழூர் ஒன்றிய தலைவர் ராமச்சந்திரன், ஆசிரியர் ராஜேந்திரன், ஜெயங்கொண்டம் ஒன்றிய தலைவர் ஆ.ஜெயராமன், கா பெரியார்செல்வன், லெ. அர்ஜுனன், மீன்சுருட்டி அ.சேக்கிழார், பழமலை நாதபுரம் சி. கருப்புசாமி உள்ளிட்ட பொறுப்பாளர்கள் பங்கேற்றனர்.
