திருச்சி, டிச.10- திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப்பள்ளி மாணவர்கள், தேசிய அளவில் ‘தி குயிஸ்ட் ஒலிம்பியாட்’ அமைப்பின் சார்பில் நடத்தப்பட்ட போட்டியின் பல்வேறு பிரிவுகளில் கலந்து கொண்டு தங்கள் திறமைகளை வெளிப்படுத்தி முதல் இடத்தோடு, தங்கப் பதக்கங்களையும் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
ஓவிய ஒலிம்பியாட் போட்டியில்
2ஆம் வகுப்பு மாணவர் ஜோவியன் ஆண்டனி, 3ஆம் வகுப்பு மாணவர் ஜே.ஹாபிஸ், மாணவி டி.ரஃபா, 4ஆம் வகுப்பு மாணவர் எம்.சாம் ராடிக், யூகேஜி மாணவி டி.அரிஷ்ஃபா ஆகியோர் வண்ண உணர்வு, படைப் பாற்றல், நுட்பமான வடிவமைப்பு ஆகியவற்றிற்காக முதலிடத்தோடு தங்கப் பதக்கம் பெற்றனர்.

கணித ஒலிம்பியாட் போட்டியில்
2ஆம் வகுப்பு மாணவர் ஜோவியன் ஆண்டனி மற்றும் 3ஆம் வகுப்பு மாணவர் எஸ்.அர்ஷின் ஆகியோர் கணிதத்திற்கான துல்லியமான கணிப்பு மற்றும் விரைவு ஆகியவற்றின் அடிப்படையில் 100/100 மதிப்பெண்களுடன் தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
கையெழுத்து ஒலிம்பியாட் போட்டியில்
3ஆம் வகுப்பு மாணவி ஏ.சிறீ ஹர்ஷினி, 5ஆம் வகுப்பு மாணவி பி.எஸ்.கீர்த்தனா, 7ஆம் வகுப்பு மாணவி எஸ்.சஞ்சனா, 8ஆம் வகுப்பு மாணவி வி.வாகீஷ்வரி ஆகியோர் எழுத்தின் அழகு, ஒழுங்கு, தெளிவு ஆகியவற்றை வெளிப்படுத்தி முதலிடத்தோடு தங்கப் பதக்கம் வென்றனர்.
ஆங்கில ஒலிம்பியாட் போட்டியில்
2ஆம் வகுப்பு மாணவர் எஸ்.ஜே.முகாந்த் மற்றும் 3ஆம் வகுப்பு மாணவி.டி. ரைஃபா ஆகியோர் மொழித் திறன், சொல் புரிதல், துல்லியமான பதில்கள் ஆகியவற்றில் சிறந்து விளங்கி, முதலிடத்தோடு தங்கப் பதக்கம் வென்றுள்ளனர்.
இத்தனைப் பிரிவுகளில் முதலிடம் பெற்று தங்கப் பதக்கம் பெற்ற மாணவர்களையும் இப்போட்டிகளின் பொறுப்பாசிரியர் பி.நந்தினி ஆகியோரைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் அனைவரும் பாராட்டி வாழ்த்தினர்.
மாணவர்களின் முயற்சி, பெற்றோர் ஊக்கம், ஆசிரியர்களின் வழிகாட்டுதல் ஆகியவை இச்சாதனையின் முக்கிய காரணங்களாகும்.
துறையூரில் நடந்த பேட்மின்டன் போட்டியில் வெண்கலப் பதக்கம்!
துறையூர், ஜமீன்தார் மேல்நிலைப் பள்ளியில் கடந்த மாதம் பள்ளிக் கல்வித் துறை சார்பில், நடைபெற்ற மாநகர / வருவாய் மாவட்ட அளவிலான விளையாட்டுப் போட்டிகளில், திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியின் ஒன்பதாம் வகுப்பு மாணவிகள் கே.ஜோவிதா , ஜே.ஆக்னஸ்மேரி, எட்டாம் வகுப்பு மாணவிகள் எஸ்.சிறீமதி, எம்.ஹர்ஷிதா, ஆர்.தியா, ஆறாம் வகுப்பு மாணவிகள் எம்.கனிஷ்கா,கே. பூஷிதா சிறீ மற்றும் ஆர்.பிரீத்திகா ஆகியோர் அடங்கிய 14 வயதிற்குட்பட்டோருக்கான பிரிவில் பந்து பேட்மின்டன் போட்டியில் சிறப்பாக விளையாடி மாவட்ட அளவில் மூன்றாம் இடத்தோடு வெண்கலப் பதக்கம் வென்று பள்ளிக்குப் பெருமை சேர்த்துள்ளனர்.
வெற்றி பெற்ற சாதனை மாணவிகளையும், அவர்களுக்கு சிறப்பாகப் பயிற்சி அளித்து வழிநடத்திய பள்ளியின் உடற்கல்வி ஆசிரியர்கள் சவுமியா மற்றும் கோகுல் ஆகியோரைப் பள்ளித் தாளாளர், முதல்வர், ஆசிரியர்கள் மற்றும் அலுவலகப் பணித் தோழர்கள் வாழ்த்தி மகிழ்ந்தனர்.
