காராக் நகர், பகுத்தறிவாளர் மன்றம் எம்ஜிஆர் ரசிகர் மன்றம் ஆகியோரின் ஏற்பாட்டில் நடைபெற்ற திருக்குறள் அறிமுக விழாவில் பெரியாரின் பணிகள் எவ்வாறு தமிழ் மொழிக்கும் திருக்குறளுக்கும் சிறப்புகள் சேர்த்தன என்ற விளக்க உரையை சுமார் 50க்கும் மேற்பட்ட மாணவர்கள் மற்றும் பொதுமக்கள் கலந்து கொண்ட கூட்டத்தில் மலேசியா பெரியார் பன்னாட்டு அமைப்பு தலைவர் முனைவர் மு.கோவிந்தசாமி தமது சிறப்புரையில் விளக்கினார். இந்த நிகழ்வில் காராக் தமிழ்ப் பள்ளி, தெலிமோங் தோட்ட தமிழ்ப்பள்ளி ரென் ஜாக் தோட்ட தமிழ்ப்பள்ளி மாணவர்களும் ஆசிரியர்களும் பெரியார் தொண்டர்கள் சின்னையா மற்றும் கருப்பையா பொதுமக்கள், கலந்து சிறப்பித்தார்கள். மாணவர்களுக்கு திருக்குறள் மற்றும் பெரியார் பிஞ்சு நூல்கள் வழங்கப்பட்டன. விரைவில் 300 உயர்நிலைப்பள்ளி மாணவர்கள் கலந்து கொள்ளும் திருக்குறள் விளக்கக் கூட்டம் இந்த மாவட்ட தலைநகரில் ஏற்பாடு செய்யப்படும். கருணாநிதி நன்றி உரை கூறினார்.
