எந்த அயோத்தியாக தமிழ்நாடு மாற வேண்டும்?: கனிமொழி

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

அயோத்தி போல தமிழ்நாடு வருவதில் தவறில்லை என நயினார் தெரிவித்த கருத்துக்கு கனிமொழி பதிலடி கொடுத்துள்ளார். எந்த அயோத்தி போல தமிழ்நாடு மாற வேண்டும் என கேட்ட அவர், கடந்த தேர்தலில் ஆர்.எஸ்.எஸ். பாஜகவைப் படுதோல்வி அடையச் செய்து, மக்கள் தூக்கியெறிந்த ஃபைசாபாத் தொகுதியில் உள்ள அயோத்தியைப் போலவா என கேள்வி எழுப்பியுள்ளார். கவலை வேண்டாம்! அப்படி தான் தமிழ்நாடு பல ஆண்டுகளாக இருந்து வருவதாகவும் குறிப்பிட்டுள்ளார்.

நம்பிக்கைகளைத் தீர்ப்பில் காட்டக்கூடாது: பெ.சண்முகம்

அரசியல் சாசனத்திற்கும், சட்டத்திற்கும் உட்பட்டுதான் நீதிபதிகள் தீர்ப்பளிக்க வேண்டும் என சிபிஎம் மாநில செயலாளர் பெ.சண்முகம் தெரிவித்துள்ளார். திருப்பரங் குன்றம் விவகாரத்தை பற்றி பேசிய அவர், நீதிபதிகள் தங்களுடைய நம்பிக்கைகளை தீர்ப்பில் வெளிப்படுத்துவது சட்டவிரோத மானது என விமர்சித்துள்ளார். மேலும், திருப்பரங்குன்றம் விவகாரத்தில் தமிழ்நாடு அரசை ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்களும் பாராட்டி வருவதாகவும் அவர் கூறியுள்ளார்.

மக்கள் பிரச்சினைகளுக்கு
பிஜேபியிடம் தீர்வு இல்லை: பிரியங்கா காந்தி

முக்கிய பிரச்சினைகளை திசை திருப்பவே ‘வந்தே மாதரம்’ பாடல் தொடர்பான விவாதத்தை மோடி கையில் எடுத்திருப்பதாக பிரியங்கா காந்தி விமர்சித்துள்ளார். நாடாளுமன்றத்தில் நடக்கும் சிறப்பு விவாதத்தில் பங்கேற்ற அவர், மக்கள் நலன் சார்ந்த பிரச்சினைகளில் ஒன்றிய அரசிடம் ஒரு தீர்வும் இல்லை என சாடியுள்ளார். மேலும் கடந்த காலத்தை பற்றி மட்டுமே பாஜக பேசி வருவதாகவும் குற்றம்சாட்டினார்.

100 மொழிகளில்
திருக்குறள் மொழியாக்கம்

2026 ஆகஸ்ட் மாதத்திற்குள் 100 மொழிகளில் திருக்குறளை கொண்டு செல்லும் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருவதாக, ஒன்றிய செம்மொழி தமிழ் நிறுவனத்தின் தலைவர் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார். இதுவரை 25 இந்திய மொழிகளிலும், 9 உலக மொழிகளிலும் மொழியாக்கம் செய்யப்பட்டுள்ளது. வரவிருக்கும் நாள்களில் ஜெர்மன், பிரெஞ்சு, ஸ்பானிஷ் உள்ளிட்ட முக்கிய வெளிநாட்டு மொழிகளில் மொழியாக்கம் செய்ய உள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.  சொல்லளவிலேயே நெடுங்காலமாக இருக்கிறதே?

சபரிமலையில் 10 பேர் உயிரிழப்பு.. தொடரும் சோகம்

சபரிமலை செல்லும் அய்யப்ப பக்தர்கள் அடுத்தடுத்து உயிரிழப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. நவ.16-இல் நடை திறக்கப்பட்ட நிலையில், தமிழ்நாட்டில் இருந்து பல்லாயிரக்கணக்கானோர் சபரிமலை கோயிலுக்கு சென்று வருகின்றனர். முதல் 10 நாள்களில், கோவை பக்தர் முரளி உள்பட 9 பேர் உடல்நலக் குறைவால் உயிரிழந்திருந்தனர். இந்நிலையில், நேற்று
(8.12.2025) கடலூர் பக்தர் சுந்தர் (66), மாரடைப்பால் இறந்துள்ளார். பாதுகாப்பாக இருங்கள் பக்தர்களே!

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *