திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி, கி.தண்டபாணி ஆகியோரின் சகோதரர் கி.கோவிந்தராஜன் அவர்களின் மருமகளும், செல்வாஸ் டிஜிட்டல் போஸ்டர் உரிமையாளரும், தி.மு.க.மாவட்ட பிரதிநிதியுமான கி.கோ.செல்வமணி அவர்களின் வாழ்விணையருமான செ.செல்வராணி (ஆசிரியை, ஓய்வு) அவர்களின் மறைவையொட்டி, கடலூரிலுள்ள அவரது இல்லத்திற்கு 08.12.2025 திங்கட்கிழமை பகல் 11 மணிக்குத் தமிழர் தலைவர் ஆசிரியர் அவர்கள் நேரில் சென்று அவரது உடலுக்கு மாலை வைத்து இறுதி மரியாதை செலுத்தினார். உடன் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் முனைவர் துரை.சந்திரசேகரன், புதுச்சேரி மாவட்டத் தலைவர் வே.அன்பரசன், செயலாளர் புதுவை ராசா, மறைந்த அம்மையாரின் இணையர் கி.கோ.செல்வமணி மகன்கள் செ.அருண்குமார், செ.ஆசைதம்பி மற்றும் திராவிடர் கழகத்தின் கடலூர், புதுச்சேரி மாவட்டத் தோழர்கள் உள்ளனர்.
தொடர்ந்து கழகத் தலைவரின் இணையர் மோகனா அம்மையார், கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கடலூர் மாவட்டத் தலைவர் தண்டபாணி, செயலாளர் எழிலேந்தி, நகரத் தலைவர் தென்.சிவக்குமார், கடலூர் வேலு, புதுச்சேரி தமிழ்ச்செல்வன், லோ.பழனி மற்றும் மாவட்டத் தோழர்கள் மரியாதை செலுத்தினர்.
நேற்று (7.12.2025) இரவு கூட்டத்தை முடித்துவிட்டு, நாகப்பட்டினத்தில் தங்கியிருந்த தமிழர் தலைவர் அவர்கள், இறுதி மரியாதை செலுத்துவதற்காகக் கடலூர் வந்து, மீண்டும் இன்று (8.12.2025) மாலை நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக காரைக்கால் விரைந்தார்.
