- தொண்டு செய்து பழுத்த பழம்
தூயதாடி மார்பில் விழும் – அவர்தாம் பெரியார்!
இது புரட்சிப் பாவேந்தர் வடித்த கவிமொழி. - தொண்டு செய்து கனிந்த கனி
தூய்மைத் தோன்றல் தகைசால் வீரமணி!
இது திராவிடத் தமிழினம் வழங்கிடும் புகழ்மொழி. - உழைப்பு உழைப்பு உழைப்பு
அதன் பெயர்தான் ஸ்டாலின்!
இது கலைஞர்தம் கூர்த்தமதி கனிந்தளித்த அருங்கணிப்பு. - தொண்டு தொண்டு தொண்டு
அதன் மறுபெயர்தான் வீரமணி!
இது பெரியாரியக்கம் பெரிதுவந்து அளித்திட்ட பெருஞ்சிறப்பு. - நன்றி நன்றி நன்றி
சிறுகனூர் நாயகருக்குச் சிறப்புமிகு செய்ந்நன்றி!
இது நூற்றாண்டு பல கடந்தும் நிலைநின்று ஒளிரும் பெரியார் உலகம் பொறித்து வைக்கும் நினைவுக் குறிப்பு. - வாழ்க வாழ்க வாழ்க
வாய்மைத் தலைவர் வீரமணி வாழ்க!
இது தொண்ணூற்று மூன்றாம் அகவையைத் தொடும் நாளில் திராவிடப் பெருமக்கள் தொடர்ந்தெழுப்பும் நன்றியின் குரல்!
– தஞ்சை பெ.மருதவாணன்
