இருண்ட வனத்தின்
ஒளி விளக்காம்
இடருற்ற மாந்தர்க்குக்
காவலனாம்
இழிநிலை சாய்த்திடும்
உறை வாளாம்
ஈரோட்டுப் பெரியார்
அன்னை மணியார்
அடையாளங் கண்ட
ஆற்றலாளர்
ஆசிரியர்!
மாணவ மணியாய்
தொடங்கிய பேச்சு
விடுதலை மணியாய்
ஓங்கிய வீச்சு
தொண்டறப் பணியால்
எம்துயர் போச்சு
திராவிடர்க் கணியாய்
என்றும் உம் மூச்சு!
உழைக்கும் மக்கள்
உயர்ந்திடவே
உரிமை காக்கும்
போரினிலே
உலைவின்றித் தாழாது
உழைத்தே வெற்றி
கண்ட வீரர்!
பொறுப்பேற்ற
முதல்ஆண்டில்
அய்யாவுக்கு
தொடர்ந்து
அண்ணா,
அன்னை மணி,
கலைஞருக்கு
வரலாற்றுச் சிந்துவெளி
வைக்கத்துக்கு
வரலாறாய் வந்துதித்த
இயக்கத்துக்கு
இயக்கத்தின் திசை வகுத்த
‘குடிஅரசு’க்கு
இன்னும்
கருஞ்சட்டை வீரர்
பலருக்கு
நூற்றாண்டு விழாக்கண்டே
உவகை கொண்ட
உமைக்கொண்டே
நூற்றாண்டு
உமக்கும் காண்போம்!
– இறைவி
