திருச்சி, டிச. 6– தமிழ்நாட்டின் பகுத்தறிவுச் சிந்தனை, மனிதநேயப் பாதை, மற்றும் சமூக மாற்றத்தின் ஒளி விளக்காகத் திகழும் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்களின் 93ஆம் பிறந்தநாள் விழா, திருச்சி பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல்நிலைப் பள்ளியில் மிகச் சிறப்பாகக் கொண்டாடப்பட்டது.
இந்த விழாவை முன்னிட்டு 1 முதல் 12 ஆம் வகுப்பு வரையிலான அனைத்து மாணவர்களுக்காக பள்ளியின் பல்வேறு மன்றங் களின் முயற்சியுடன் திறனை வெளிப்படுத்தும் பல்வேறு போட் டிகள் ஏற்பாடு செய்யப்பட்டது. விழாவுக்கே உரிய மாணவர் பங்கேற்பும் உற்சாகமும் நாள் முழுவதும் பள்ளி வளாகத்தை ஆற்றல்மிகு கலைவிழா நடைபெறும் இடமாக மாற்றியது.
நடைபெற்ற போட்டிகள்:
நாடகம் – சமூகச் செய்திகள் நிறைந்த அரங்கேற்றங்கள் பாராட் டைப் பெற்றன.
நடனம் – ஒற்றுமை, ஒழுக்கம், மற்றும் கலைநயம் கலந்து ஒளிர்ந்த நிகழ்ச்சிகள்.
பேச்சு – ஆசிரியர் அய்யா அவர் களின் சிந்தனைகளை இளம் குரல் கள் தெளிவாகத் தாங்கிச் சென்றன.
கட்டுரை – மாணவர்களின் சிந்த னைத் திறனை வெளிப்படுத்தும் ஆசிரியர் குறித்த சரளமான எழுத் துப் படைப்புகள்.
கவிதை – உணர்ச்சியையும் கருத் தையும் இணைத்த அய்யாவிற்கான மனம்கவரும் வாழ்த்துக் கவிதைகள்.
பொன்மொழிகள் ஒப்புவித்தல் – தமிழர் தலைவரின் ஓங்கிய வழிகாட்டும் கருத்துகளை நினைவு படுத்திய மாணவர்கள்.
இந்தப் போட்டிகளில் சிறந்து விளங்கிய மாணவர்களுக்கு பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா பரிசுகள், பாராட்டுச் சான்றிதழ்கள் வழங்கி மாணவர்களை உற்சாகப் படுத்தினார். தங்கள் திறமைகளை மேடையில் வெளிப்படுத்திய அனைத்து மாணவர்களையும் அவர் பாராட்டி, இவ்விழா மாணவர்களின் சிந்தனை, படைப்பாற்றல் மற்றும் சமூகப் பொறுப்புணர்வை வளர்க் கும் என குறிப்பிட்டார்.
நிகழ்ச்சிகளுக்கான ஏற் பாடுகளைப் பள்ளியின் அனைத்து மன்றங்களின் பொறுப் பாசிரியர்கள் மிகச் சிறப்பாக ஒருங் கிணைத்திருந்தனர்.
