மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத் துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் கிண்டி ரேஸ்கோர்ஸ் வளாகத்தில் அமைக்கப்பட்டுள்ள 4 குளங்களில் நீர் நிறைந்துள்ளதை நேற்று (4.12.2025) பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது செய்தியாளர்களிடம் அவர் கூறும்போது இங்கு 6 குளங்கள் வெட்டப்பட்டு, 28.75 கோடி லிட்டர் மழை நீரை சேமித்து வைத்து மக்கள் பயன்பாட்டுக்கு கொண்டு வரப்பட்டுள்ளது. முதலமைச்சரின் அறிவியல் பூர்வமான நடவடிக்கையால் வேளச்சேரியில் வெள்ளம் பரவாமல் தடுக்கப்பட்டது என்று குறிப்பிட்டார்.
