சென்னை, டிச 5 மாமதுரையின் வளர்ச்சிக்குத் தேவை ‘‘வளர்ச்சி அரசியலா’’ அல்லது வேறு எந்த மாதிரியான அரசி யலா? என்பதை அங்கு வாழும் மக்களே முடிவு செய்வார்கள் என்று தமிழ்நாடு முதலமைச்சர்மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
மதுரை திருப்ப ரங்குன்றத்தில் நடக்கும் ஹிந்துத்துவ அமைப்பினரின் வன்முறை நடவடிக்கைகளுக்கு இடையே முதலமைச்சர் தனது சமூகவலைதளப் பக்கதில் பதிவிட்டுள்ளதாவது மதுரை மக்கள் எதிர்பார்ப்பது, மெட்ரோ ரயில் திட்டம், எய்ம்ஸ் மருத்துவமனை மற்றும் புதிய தொழிற்சாலைகள் மற்றும் வேலைவாய்ப்புகள் ஆகியவற்றைத்தான் என்று குறிப்பிட்டார்.
இவ்வாறு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் தெரி வித்துள்ளார்.
ஹிந்துத்துவ சக்திகளின் வன்முறைவெறியாட்டம் மதவெறி தமிழ்நாட்டில் பலிக்காது மக்கள் வளர்ச்சிக்குத் தேவையான உள்கட்டமைப்பு மற்றும் வேலைவாய்ப்புத் திட்டங்களை எதிர்ப்பார்க்கிறார்கள் என்பதை வலியுறுத்தும் வகையில் முதலமைச்சரின் இந்தக் கருத்து அமைந்துள்ளது.
