டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* நீட் தேர்வை மறு பரிசீலனை செய்க; தகுதியை மேம்படுத்தாமல், வணிகமயமாகிவிட்டது என மாணிக்கம் தாகூர் எம்.பி. மக்களவையில் பேச்சு.
நியூ இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* வாக்குச் சாவடி நிலை அதிகாரிகளுக்கு பணிச் சுமை… எஸ்.அய்.ஆர் பணிக்கு கூடுதல் ஊழியர் களை நியமிக்க மாநிலங்களுக்கு உச்சநீதிமன்றம் உத்தரவு
தி இந்து:
* மாநில பார் கவுன்சில்களில் பெண்களுக்கு 30% இடஒதுக்கீடு வழங்க உச்சநீதிமன்றம் உத்தரவு.
தி டெலிகிராப்:
* கடுமையான பணியாளர் பற்றாக்குறை காரணமாக 550 இண்டிகோ விமானங்கள் ரத்து: இரண்டாவது நாளாக லட்சக்கணக்கான பயணிகள் பரிதவிப்பு.
டைம்ஸ் ஆப் இந்தியா:
* பீகாரில் 5 லட்சம் போலி வாக்காளர்கள்: பீகாரின் வாக்காளர் பட்டியல்களின் சிறப்பு தீவிரத் திருத்தம் 5 லட்சத்திற்கும் அதிகமான போலி வாக்காளர்களை நீக்கத் தவறிவிட்டது என்ற தன்னார்வ தொண்டு நிறுவனமான ஜனநாயக சீர்திருத்தங்களுக்கான சங்கத்தின் (ADR) குற்றச்சாட்டை எதிர்கொள்ள ஆவணங்களைத் தயாராக வைத்திருக்குமாறு உச்ச நீதிமன்றம் தேர்தல் ஆணையத்திற்கு உத்தரவு.
* ஒலிபெருக்கி (லவுட்ஸ்பீக்கர்) பயன்படுத்துவது எந்த மதத்தையும் கடைப்பிடிப்பதற்கான அத்தியாவசிய அம்சம் அல்ல; மேலும், ஒலிபெருக்கியின் ஒலியை அதிகப்படுத்துவது, அதை கேட்க வேண்டாம் என விரும்பும் நபர்களின் உரிமைகளைப் பாதிக்கக் கூடாது, உச்ச நீதிமன்றத்தின் ஒரு தீர்ப்பை மேற்கோள் காட்டிய மும்பை உயர் நீதிமன்றத்தின் நாக்பூர் அமர்வு தீர்ப்பு.
– குடந்தை கருணா
