
‘பெரியார் நூலக வாசகர் வட்டத்தின் சார்பில் அதன் நிர்வாகிகள் ரூ.1,16,500க்கான காசோலையை தமிழர் தலைவரிடம் வழங்கினர். குடையோடு மட்டுமல்ல, அளவில்லாமல் அள்ளித் தரும் நன்கொடையோடு வந்திருக்கிறார்கள் என்று ஆசிரியர் பாராட்டும் அளவுக்கு மாதந்தோறும் வழங்கும் நன்கொடையோடு ஆண்டுதோறும் அளிக்கும் நன்கொடையும் சேர்த்து ரூ.1,30,100யை தமிழர் தலைவரிடம் க.ச. பெரியார் மாணாக்கன், மு. செல்வி, செ.பெ. தொண்டறம் ஆகியோர் வழங்கினர்.
