தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என்.ரவியின் அவதூறுப் பிரச்சாரத்தைக் கண்டித்து திராவிடர் கழக ஆர்ப்பாட்ட முழக்கங்கள்

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

* வாழ்க வாழ்கவே

தந்தை பெரியார் வாழ்கவே!

 

* வாழ்க வாழ்கவே

அன்னை மணியம்மையார் வாழ்கவே!

 

* வாழ்க வாழ்கவே

தமிழர் தலைவர் ஆசிரியர் வாழ்கவே!

 

* காப்போம் காப்போம்!

அரசியலமைப்புச் சட்டம் வழங்கும்

மாநில உரிமைகளைக் காப்போம்!

 

*    கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்

ஆளுநர் ரவியை கண்டிக்கிறோம்!

 

* தமிழ்நாட்டையும் தமிழர்களையும்

இழிவுபடுத்தும் ஆர்.என்.ரவியைக்

கண்டிக்கிறோம் கண்டிக்கிறோம்!

 

*    சிதைக்காதே சிதைக்காதே

நாட்டின் ஒற்றுமையைச் சிதைக்காதே!

 

* ஒரிசாவிலும் பீகாரிலும்

தமிழர்களை இழிவுபடுத்தி

ஒற்றுமையைக் குலைப்பவர் பிரதமரா?

 

*  தமிழ்நாட்டின் வரிப் பணத்தில்

சம்பளத்தை வாங்கிக் கொண்டு

தமிழ்நாட்டை இழிவுபடுத்தும்

ஆர்.என்.ரவி ஆளுநரா?

 

* ஆபத்து! ஆபத்து!

ஆர்.எஸ்.எஸ்.சால் ஆபத்து!

இந்தியாவின் ஒற்றுமைக்கு

ஆர்.எஸ்.எஸ்.- சங் பரிவாரால்

பா.ஜ.க.வால் ஆபத்து!

 

*    மதக் கலவரங்களை நாட்டில் தூண்டி

பயங்கரவாதத்தை வளர்ப்பது யார்?

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க!

 

*    மணிப்பூர் கலவரம் தொடரும்போதும்

மக்களைப் பார்க்காத பிரதமர் யார்?

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.!

 

* ஷாகாக்கள் என்னும் பெயரால்

வன்முறைப் பயிற்சிகள் தருவது யார்?

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.!

 

*    மதத்தின் பெயரால் ஜாதியின் பெயரால்

மக்களை நித்தமும் பிரிக்கின்ற

பிரிவினைவாதிகள் யார் யார்?

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க!

 

* வள்ளுவருக்குக் காவியைப்பூசி

ஸநாதனவாதி ஆக்க நினைக்கும்

திரிபுவாதிகள் யார்? யார்?

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க.!

 

* நாட்டின் ஒற்றுமைக்கு ஆபத்தை

நாளும் விதைக்கும் நச்சுகள் யார்?

ஆர்.எஸ்.எஸ். – பா.ஜ.க!

 

* திராவிடத்தைக் கொச்சைப்படுத்தி

தனித் தமிழைக் கொச்சைப்படுத்தி

தமிழ்நாட்டின் சம்பளம் வாங்க

வெட்கமில்லையா? வெட்கமில்லையா?

ஆர்.என்.ரவியே வெட்கமில்லையா?

 

* ஆரியத்துடன் தொடர்பற்றது

செம்மொழியாம் தமிழ்மொழி!

திராவிடத்தின் மூத்தமொழி

செம்மொழியாம் தமிழ்மொழி!

சமஸ்கிருதத்தைச் சேராமல்

தனித்தியங்கும் செம்மொழி

எம் மொழி தமிழ்மொழி!

 

* ஏற்க மாட்டோம்! ஏற்க மாட்டோம்!

சமஸ்கிருதத் திணிப்பை ஏற்க மாட்டோம்!

 

* பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்!

பண்பாட்டுப் படையெடுப்பைப்

பொறுக்க மாட்டோம்! பொறுக்க மாட்டோம்!

– திராவிடர் கழகம்

 

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *