3.12.2025
டெக்கான் கிரானிக்கல், சென்னை:
* மக்கள் தொகை கணக்கெடுப்பு, இரண்டு கட்ட மாக நடத்தப்படும்: ஏப்ரல் 2026 மற்றும் பிப்ரவரி 2027. நாடாளுமன்றத்தில் ஒன்றிய அரசு பதில்.
* ஒன்றிய அரசின் சஞ்சார் சாதி செயலி, பயனாளிகள் எப்போது வேண்டுமானாலும் நீக்கிக் கொள்ளலாம், ஒன்றிய அமைச்சர் பதில்.
* நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டத்தில் முடிவு தேர்தல் சீர்திருத்தம் பற்றி டிச.9இல் விவாதம்: நாடாளுமன்ற விவகார அமைச்சர் ரிஜ்ஜூ அறிவிப்பு.
* அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பு ரூ.90 ஆக வீழ்ச்சி.
டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தேர்தல் சீர்திருத்தம் பற்றி டிச.9இல் விவாதம் எதிர்க்கட்சிகளின் கடும் எதிர்ப்புக்கு பணிந்தது ஒன்றிய அரசு என காங்கிரஸ் எம்பி மாணிக்கம் தாகூர் கருத்து.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
*குஜராத்தில் இளைஞர்கள் போதைப்பொருள், மது மற்றும் குற்றச் செயல்களில் தள்ளப்படுவதாக காங்கிரஸின் ஜன் ஆக்ரோஷ் யாத்திரையில் ராகுல் காந்தி குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
