குடந்தை, டிச. 3– கழகப் பொதுக் குழு உறுப்பினர் ஆ.தமிழ்மணி ஆ. ராஜதுரை ஆகியோரின் தாயார் மானாம்பாடி ஊராட்சி மன்ற மேனாள் தலைவர் பெரியார் பெருந்தொண்டர் சுயமரியாதைச் சுடரொளி சோ.ஆறுமுகம் அவர்களின் துணைவியார் கவுரியின் படத்திறப்பு நிகழ்வு 30-11-2025 அன்று முற்பகல் 12:00 மணி அளவில் மானம்பாடி புனித லூர்து அன்னை திருமண மகாலில் நடைபெற்றது.
நிகழ்விற்கு குடந்தை கழக மாவட்டத் தலைவர் வழக்குரைஞர் கு.நிம்மதி தலைமையேற்று உரை யாற்றினார்.
திமுக மாவட்ட பிரதிநிதி இஸ்ரேல் திராவிடர் கழக மாவட்ட தொழிலாளர் அணித் தலைவர் ஜில் ராஜ் ஆகியோர் முன்னிலை ஏற்று உரையாற்றினர்.
மாவட்ட மகளிர் அணித் தலைவர் திரிபுரசுந்தரி, பகுத்தறி வாளர் கழகப் பொறுப்பாளர் பேராசிரியர் பாலகிருஷ்ணன், பகுத்தறிவாளர் கழக மாவட்டச் செயலாளர் பேராசிரியர் சேதுராமன், வழக்குரைஞர் அணி பொறுப்பாளர் ரமேஷ், பகுத்தறிவாளர் கழக செல்வ ராசு, குடந்தை ஒன்றிய தலைவர் மகாலிங்கம், மாநகர செயலாளர் காமராஜ், மாநகரத் தலைவர் சிவக்குமார், மாநகர மகளிர் அணி தலைவர் அம்பிகா, மாவட்ட தொழிலாளர் அணித் துணைச் செயலாளர் சங்கர் ஆகியோர் நினை வேந்தல் உரையாற்றினர்.
திராவிடர் கழக மாநில ஒருங்கிணைப்பாளர் இரா. ஜெயக்குமார் மறைந்த ஆ.கவுரியின் படத்தினை திறந்து வைத்து நினை வேந்தல் உரை ஆற்றினார்.
பொதுக்குழு உறுப்பினர் ஆ.தமிழ் மணி நன்றி கூறினார்.
நிகழ்வில் உறவினர்கள் நண் பர்கள் கழகத் தோழர்கள் பெருந் திரளாக பங்கேற்றனர்.
