டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா பிற்படுத்தப்பட்டோருக்கு 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதா: ஒன்றிய அரசு ஒப்புதல் அளிக்காமல் காலம் தாழ்த்துகிறது என துணை முதலமைச்சர் மல்லு பட்டி கண்டனம்.
* உ.பி.யில் பி.எல்.ஓ அதிகாரி தற்கொலை. இதுவரை 12 மாநிலங்களில் 10 பி.எல்.ஓக்கள் இறந்துள்ளனர்.
* எஸ்.அய்.ஆரை எதிர்த்து மேற்கு வங்கத்தில் மம்தா பேரணி நடத்தத் தீவிரம்.
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* ‘‘பாஜக இப்போது இந்த கவனச்சிதறல் நாடகத்தை நிறுத்திவிட்டு மக்கள் எதிர்கொள்ளும் உண்மையான பிரச்சினைகள் குறித்து நாடாளுமன்றத்தில் விவாதத்தில் ஈடுபட வேண்டும் என காங்கிரஸ் கட்சியின் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே பதிவு. நாடாளுமன்றம் நாடகம் நடத்துவதற்கான இடமில்லை. அது பேச்சுவார்த்தைக்கான இடம் என்று கூறி எதிர்க்கட்சிகளை பிரதமர் மோடி மறைமுகமாக விமர்சித்து நிலையில், அதற்கு பதிலடி கொடுத்து உள்ளார் கார்கே.
தி இந்து:
* எஸ்அய்ஆர் குறித்து விவாதம் நடத்தக்கோரி எதிர்க்கட்சிகள் அமளி: முதல்நாளிலேயே மக்களவை முடங்கியது:
டெக்கான் ஹெரால்ட்:
* சஞ்சார் சாத்தி: கைப்பேசிகளில் புதிய செயலி கட்டாயம்; ஒன்றிய அரசு உத்தரவு: ‘அரசியல மைப்பிற்கு விரோதமானது, தனிநபர் உரிமைக்கு எதிரானது’ என காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் காட்டம்.
– குடந்தை கருணா
