டெக்கான் கிரானிக்கல், அய்தராபாத்:
* தெலங்கானா பிற்படுத்தப்பட்டோர் 42 சதவீத இட ஒதுக்கீடு மசோதா உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி டிசம்பர் 10இல் டில்லியில் போராட்டம். பிற்படுத்தப்பட்டோர் அமைப்புகள் அழைப்பு.
* பரபரப்பான சூழலில் குளிர்கால கூட்டத்தொடர் நாடாளுமன்றம் இன்று கூடுகிறது: எஸ்.அய்ஆர் குறித்து விவாதிக்காவிட்டால் அவை முடங்கும் என எதிர்க்கட்சிகள் போர்க்கொடி
இந்தியன் எக்ஸ்பிரஸ்:
* குஜராத்தில் ரூ.64000 கோடி போதைப் பொருட்கள்: கடந்த அய்ந்து ஆண்டுகளில், குஜராத்தில் இருந்து “குறிப்பாக கடற்கரையில் இருந்து கொண்டு செல்லப்பட்ட” “ரூ.64,000 கோடிக்கு மேல்” சட்டவிரோத போதைப் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக குஜராத் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் (ஜிபிசிசி) செயல் தலைவரும் வட்காம் எம்எல்ஏவுமான ஜிக்னேஷ் மேவானி குற்றச்சாட்டு.
– குடந்தை கருணா
