அய்யா பெரியாரின்
அச்சே
தத்துவம் காக்கும்
உச்சே !
உன் கால்கள்
தொடாத ஊரில்லை
உன் உடல் தொடாத
சிறையில்லை !
திராவிடத்
தேன் அடையை
பாதுகாக்கப்
பயிற்சித் தரும்
தாய்த் தேனீ- நீ !
புதிய விதைகள்
விளைந்தபடி
இருக்கும் நிலம்- நீ !
சமூகச் சீர்திருத்த
பயணத்தில்
அடக்குமுறைக்குக்
குனியாத
பனை- நீ !
கருப்புச் சட்டையில்
கருத்துப் பாடம்
சொல்லும்
நூலறுக்கும்
ஈரோட்டு நூல் – நீ !
ஆர்க்டிக் கடல்
அறிவு உனக்கு !
பசிபிக் கடல்
சகிக்கும்
மனம் உனக்கு !
திராவிடர் உரிமைக்கு
சட்டப் போர் நடத்துவதில் கனல் !
எட்டு திசைகளில்
எதிரிகளை வீழ்த்துவதில்- நீ
சுழல் !
எங்கள்
கருத்துக்கு
பஞ்சமே இல்லை
நீ ஆகாரம் !
எங்களின்
மானமிகுக்கு
நீ ஆதாரம் !
மிசா காலம்
இரவு
தள்ளிவிடப்படுகிறார்,
கால் தட்டி கீழே விழுகிறார்
தலைவர் ஸ்டாலின்
சிறைக்குள்!
தமிழர் தலைவர்
ஆசிரியர் குரல்
யாரது?
‘நான் தான் ஸ்டாலின்’
தியாகம் தொடங்கியது
மிசா அறைக்குள் !
தியாகத்தின்
தீப்பந்தமே
எங்கள்
ஆசிரியர் அய்யா
வாழ்க !
வானம்
வயது தொட்டு
வாழ்க !
– ஈரோடு இறைவன்
இணைச் செயலாளர்
திமுக இலக்கிய அணி
