வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் அடித்தட்டு மக்கள்மீது திணிப்பதாகும் கனிமொழி எம்.பி. குற்றச்சாட்டு

வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

சென்னை, நவ.30  சென்னை அண்ணா அறிவாலயத்தில் தி.மு.க. துணை பொதுச்செயலாளர் நாடாளுமன்ற உறுப்பினர் கனிமொழி 29.11.2025 அன்று அளித்த பேட்டி:

வாக்காளர் பட்டியல் தீவிர திருத்தம் என்பது அடித்தட்டு மக்கள் மற்றும் பி.எல்.ஓ.க்கள் மீது அக்கறை, மனிதாபிமானம் இல்லாமல் திணிக்கும் திட்டமாக இருக்கிறது. பல மாநிலங்களில் பி.எல்.ஓ.க்கள் மிகுந்த மன அழுத்தத்திற்கு ஆளாகியுள்ளனர். தமிழ்நாட்டில் மிக குறைவான காலத்தில் இந்த பணிகளை முடிக்க சொல்லி அழுத்தம் கொடுக்கப்பட்டுள்ளது.

ஒவ்வொரு நாளும் போராட் டத்துடன் தான் இந்த பணிகள் நடைபெற்று வருகின்றன. அதுவும் இது மழைக்காலம். இது மழைக்காலம் என்பதை கூட கணக்கில் எடுத்துக் கொள்ளாமல் பணி செய்ய வலியுறுத்துகிறார்கள். மழை காலத்தில் மக்களை பாது காக்கும் பணி அதிகாரிகளுக்கு உள்ளது. அந்த பணிகளை விட்டு அதிகாரிகள் எஸ்.அய்.ஆர். பணிகளில் கவனம் செலுத்தும் வகையில் அதிகாரிகள் தள்ளப்பட்டுள்ளனர்.

இது மக்களைப் பற்றி அக் கறையே இல்லாமல், போதிய அவகாசம் தாராமல், குறுகிய காலத்தில் செய்து முடிக்க சொல்வதை எந்த வகையிலும் ஏற்றுக் கொள்ள முடியாது. கண்டிப்பாக இதையெல்லாம் நாங்கள் நாடாளுமன்ற குளிர் கால கூட்டத்தொடரில் வலியுறுத் துவோம். இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *