மறைமலை நகர் திருவள்ளுவர் மன்றத்தின் 261ஆவது மாதக் கலந்துரையாடல் கூட்டம்

2 Min Read

அரசியல்

மறைமலைநகர், மே 6- புரட்சியாளர் அம்பேத்கரும் புரட்சிக் கவிஞர் பாரதிதாசனும் எனும் தலைப்பில் மறை மலை நகர் திருவள்ளுவர் மன்றத்தின் 261ஆவது மாதக் கலந்துரை யாடல் கூட்டம் 3.4.2023 ஞாயிறு காலை 10 மணி அளவில் நடைபெற்றது

பகுத்தறிவாளர் கழக மாவட்ட அமைப்பாளர் மு.பிச்சைமுத்து தமிழ்த் தாய் வாழ்த்து பாட, மறை மலைநகர் நகர கழக தலைவர் ம.வெங்கடேசன் திருக்குறள்  பொருள் விளக்கம் கூற, திருவள் ளுவர் மன்ற செயலாளர் மா.சமத் துவமணி தலைமையில், செங்கல் பட்டு மாவட்ட கழக தலைவர் செங்கை சுந்தரம், பொதுக்குழு உறுப்பினர் அ.பா.கருணாகரன்,  நகர அமைப்பாளர் செ.முடியர சன், காஞ்சி மண்டல இளைஞரணி செயலாளர் மு.அருண்குமார், செங்கல்பட்டு மாவட்ட இளைஞ ரணி செயலாளர் செ. வினோத் குமார்,  செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக தலைவர் அ.சிவக்குமார், செங்கல்பட்டு மாவட்ட பகுத்தறிவாளர் கழக செயலாளர் சி.தீனதயாளன், ம. கரு ணாநிதி, திராவிடர் கழக தொழி லாளர் அணி மாநிலப் பொறுப் பாளர் கூடுவாஞ்சேரி மா.ராசு, சுந்தர.எல்லப்பன், பி.நாகராஜன், சி.தனஞ்ஜெயன், சுப்பையா தி.ஆனந்தன், சு.செல்லம், எம்.முரளிதரன், ஆ.லியோன், சூ.கி. கொண்டல், க.செல்லப்பன், வ.திரு மாறன், கோ.ரமேஷ்பாபு ஆகி யோர் முன்னிலை வகித்தனர். மாநில மகளிர் பாசறை செயலாளர் வழக்குரைஞர் பா. மணியம்மை  உரையில், தந்தை பெரியாரும், புரட்சியாளர் அம்பேத்கரும் ஒத்த கருத்துள்ள கொள்கை உறவாய் ஒருவரை ஒருவரை பார்க்காமலே அன்பு கொண்டிருந்தனர். 

1940இல் தான் சந்தித்தனர் பெரியாரை அம்பேத்கர் கொண் டாடினார் அம்பேத்கரை பெரியார் கொண்டாடினார். வைக்கம் போராட்டமே மகத் குளத்து நீர் அருந்தும் போராட்டத்தை நடத்த தனக்கு உந்து சக்தியாக விளங்கியது என அம்பேத்கர் குறிப்பிடுகிறார் இந்து மதம் ஜாதிய அடுக்கு முறையும் ஜாதியால் மனிதனை இழிவுபடுத்தும் நிலையும் நிலவு கிறது. எனவே நான் இந்துவாக சாக மாட்டேன் என புத்த மதத் திற்கு லட்சக்கணக்கான தொண் டர்களுடன் சென்றார் புத்த மதத்திற்கும் பார்ப்பனர்களுக்கும் இடையே நடந்த போராட்டம் தான் இந்திய வரலாறு என அம் பேத்கர் குறிப்பிடுகிறார்.

 அதே போல புரட்சிக் கவிஞர் பாரதிதாசன் அவர்கள் மயிலாடு துறையில் தந்தை பெரியாரின் பேச்சைக் கேட்டு நான் தேடிய தலைவர் இவர்தான் என கடைசி மூச்சு உள்ளவரை தந்தை பெரியா ரின்  கொள்கைக்காக வாழ்ந்தார்.

தந்தை பெரியாரின் கொள் கைகளை கருத்துகளை உரைகளை கவிதையாக்கி, காவியம் ஆக்கி நாடகங்கள் ஆக்கி தந்தை பெரியா ரால் புரட்சிக் கவிஞர் என கொண் டாடப்பட்ட ஒரே கவிஞர், தமிழ் மொழியின் மீதும், தமிழர்கள் மீதும் கொண்ட பற்று கொண்ட புரட்சிக்கவிஞர் “தூங்கும் புலியை பறை கொண்டு எழுப்பினோம். 

தூய தமிழரை தமிழ் கொண்டு எழுப்புவோம்” என முழங்கியவர் தந்தை பெரியாரால் கொண்டா டப்பட்ட இந்த இருபெரும் தலை வர்கள் பிறந்த ஏப்ரல் மாதத்தில் நாமும் அவர்களை கொண்டாடு வோம் – என சிறப்புரையாற்றினார். பிறகு தோழர்களின் கேள்விகளுக்கு பதிலளித்தார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *