கேள்வி: ‘இந்த நூலைப் படித்தால் வாழ்க்கையே நமக்குப் புரிந்துவிடும்’ என்று எந்த நூலைக் குறிப்பிடுவீர்கள்?
பதில்: பெரிய நூல் ஒன்று தேவையில்லை. 2000 சொற்கள் மட்டுமே உள்ள அவ்வையாரின் ஆத்திச்சூடி, கொன்றை வேந்தன், மூதுரை ஆகிய மூன்று மட்டுமே போதும்.
– ‘துக்ளக்’ 26.11.2025, பக்கம் 27
அவ்வையார் இந்தப் பாடலையும் பாடியுள்ளாரே!
“நூலெனிலோ கோல்சாயும், நுந்தமரேல் வெஞ்சமராம்
கோலெனிலோ வாங்கே குடிசாயும் -–நாலாமாவான்
மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையாவான்
அந்த வரசே அரசு.”
என்றும் பாடியிருக்கிறாரே, பார்ப்பன குருமூர்த்திகளுக்கு இந்தப் பாடல் எல்லாம் ‘வசதியாக’ மறந்து விட்டதோ!
இந்தப் பாடலின் பொருள்:
“நூல் எனிலோ கோல் சாயும்”
பூணூல் அணிந்த பார்ப்பனரை மந்திரியாகக் கொண்டால் செங்கோல் அதாவது நீதி சாயும்.
நுந்தமரேல் வெஞ்சமராம்; உமது சுற்றத்தாரை (உறவினர்களை) மந்திரியாகக் கொண்டால், கொடிய போர் உண்டாகும்.
கோலெனிலோ ஆங்கே குடிசாயும்
கோலாயுதமான வணிகர்களை மந்திரியாகக் கொண்டால் குடிமக்கள் கேட்டினை அடைவார்கள்.
நாலாமாவான் சூத்திரர் எனப்படுவோர் மந்திரியும் ஆவான் வழிக்குத் துணையுமாவான் அந்த அரசே அரசு: அவனைத் துணையாகக் கொண்டதே சிறந்த அரசாகவும் இருக்கும். அவ்வையாரின் இந்தப் பாடலையும் படிக்கச் சொல்லமாட்டார் பார்ப்பன குருமூர்த்தி.
