பெங்களூரூ பெரியார் மய்யத்தைப் பார்வையிட்ட பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன்

2 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

பெங்களூரு, நவ. 28- அமெரிக்காவில் வாழ்ந்து வரும் பெரியார் பன்னாட்டு அமைப்பின் தலைவர் மருத்துவர் சோம.இளங்கோவன் 20.11.2025 அன்று அமெரிக்காவிலிருந்து பெங்களூரு வருகைத் தந்தார். அவரை ஊடகவியலாளர் முத்துமணி நன்னன் அதிகாலையிலேயே வரவேற்று, பெங்களூர்த் தமிழ்ச் சங்க வளாகத்தில் மூன்றாம் தளம், திராவிடர் அகம், பெரியார் மய்யம், ஆசிரியர், திராவிடர் கழகத் தலைவர் கி.வீரமணி அரங்கிற்கு அழைத்து வந்தார்.

கருநாடக மாநிலத் திராவிடர் கழகத் தலைவர் மு.சானகிராமன், செயலாளர் இரா.முல்லைக்கோ வரவேற்று பயனடை அணிவித்து, கருநாடக மாநில அடையாளமான மைசூர் தலைப்பாகை அணிவித்து பழங்களை வழங்கி அத்துடன் இராமாயணத்தின் உறுதி மொழிகள் நூல் வழங்கினர். பெரியார் மய்யத்தினை முழுமையும் பார்வையிட்டு மகழ்ச்சியடைந்து அவை நடவடிக்கைப் பதிவேட்டில் பதிவு செய்து மகிழ்ந்ததைப் பாராட்டி பதிவு செய்தார்.

பெங்களூர்த் தமிழ்ச் சங்கத் தலைவர் கோ.தாமோதரன், செயலாளர் மு.சம்பத், நிர்வாகி இராஜசேகர் ஆகியோர் வரவேற்று சிறிது நேரம் கலந்துரையாடி மகிழ்ந்து சங்க வளர்ச்சி, மேம்பாடுகள் பற்றி கலந்து பேசி விடை பெற்றனர். பின்னர் அல்சூர் தென் முனை சந்திப்பிலுள்ள திருவள்ளுவர் சிலை சுற்றி பார்வையிட்டு மாலை அணிவித்து அனைவரும் திருவள்ளுவரை நின்று ஒளிப்படம் எடுத்துக் கொள்ளப்பட்டு, பின்னர் தானி (ஆட்டோ) மூலம், மாநில துணைத் தலைவர் பு.ர.கஜபதி இல்லம் அமைந்துள்ள சம்பங்கிராம் நகருக்கு சென்ற அவருக்கு கஜபதி அவரது துணைவியார் செயலட்சுமி பயனாடைகள் அணிவித்து மகிழ்வினை வெளிப்படுத்தினர்.

மாநில துணைத் தலைவர் கவிஞர் சே.குணவேந்தன் தனது நீதிமன்றப் பணிகளை இடையே நிறுத்தம் செய்து விட்ட கஜபதி இல்லத்திற்கு வருகை தந்து மருத்துவர் சோம.இளங்கோவனிடம் நெடியப் பேசி மகிழ்ந்தனர். அனைவருக்கும் மதிய உணவு கஜபதி இல்லத்திலேயே வழங்கி சிறப்பு செய்தனர்.

பின்னர் கும்பார் குண்டி லேஅவுட் பகுதியிலுள்ள நாடகச் செம்மல் 106 அகவையில் நலமில்லாமலுள்ள வீ.மு.வேலு அவர்களின் இல்லத்திற்கு சென்று பயனாடை அணிவித்து வேலு அவர்களிடம் மருத்துவர் அவர்கள் தந்தை பெரியாரை போல் முதுமை நிறைந்த பேச்சால் அனைவரையும் மகிழ்வூட்டச் செய்து, உடல் நலம் விசாரித்து விட்டு அனைவரும் ஒரு சேர ஒளிப்படம் எடுத்துக் கொண்டு விடைபெற்றனர்.

மாலை ஒரு பொது நிகழ்வி லும் மருத்துவர் அவர்கள் கலந்து கொண்டு, பின்னர் மைசூர் பெருநகருக்கு புறப்பட ஆயத்த மானார்கள். கழகத் தோழர்கள் அனைவரையும் சந்தித்து அளவளாவியமை மருத்துவருக்கும், தோழர்களும் பெரும் மகிழ்வூம் கிளர்ச்சியையும் ஊட்டுவதாக அமைந்தது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *