திருச்சி, நவ. 27- திருச்சி, பெரியார் நூற்றாண்டு நினைவு மெட்ரிக் மேல் நிலைப் பள்ளியில் 21.11.2025 அன்று 10,11 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களில் மெல்லக் கற்கும் மாணவர்களை ஊக்குவிக்கும் நோக்கில் சிறப்பு ஆலோசனை மற்றும் பயிற்சி நிகழ்ச்சி நடைபெற்றது.
மாணவர்களின் கல்வித் திறன்களை உயர்த்தி, படித்ததை நினைவில் நிலைத்திருக்கச் செய்யும் பல்வேறு பயில் திறன் முறைகளை அறி முகப்படுத்தும் வகையில் இந்நிகழ்ச்சி சிறப்பாக அமைந்தது.
பள்ளி முதல்வர் முனைவர் க.வனிதா முன் னிலையில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சிக்கு, சிறப்பு விருந்தினராக பெரியார் மணியம்மை நிகர்நிலைப் பல்கலைக்கழகத்தின் உயிரித் தொழில்நுட்பத் துறை பேராசிரியரும், மாணவர் சேர்க்கைப் பிரிவின் உதவி இயக்கு நருமான மேலும் பெரியார் கல்விக் குழுமங்களின் இணை ஒருங்கிணைப்பாளருமான முனைவர் டி. கிருஷ்ண குமார் கலந்து கொண்டு ஆழமான விளக்கங்களுடன் கருத்துரையாற்றினார்.
மாணவர்கள் எவ்வாறு திட்டமிட்ட முறையில் படிப்பது, நினைவாற்றலை அதிகரிக்கும் பயிற்சிகள், திரும்பத் திரும்பப் பயிற்சி பெறும் பழக்கம், பாடத்தை படிப்பதற்கான நேர மேலாண்மை, தேர்வில் எழுதும் நடை முறை போன்ற பல முக்கிய அம்சங்களை அவர் எளிமையாகவும் நடைமுறைக்கேற்ற வகையிலும் பகிர்ந்து எடுத்துரைத்தார். மேலும், “ஒவ்வொரு மாணவரும் தனித்திறன் கொண்டவர்கள்; சரியான வழிகாட்டுதல் கிடைத்தால் எந்த சிரமத்தையும் கடக்க முடியும்” என மாணவர் களுக்கு ஊக்கமளிக்கும் வார்த்தைகளையும் வழங் கினார்.
இந்நிகழ்ச்சி மாணவர் களின் மனஉறுதியை உயர்த்தியதோடு, தங்களுக் கேற்ற கற்றல் முறை என்ன என்பதை உணர்ந்து செயல்பட உதவும் வழி காட்டுதல்களையும் அளித்தது.
