தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாள் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி

2 Min Read

சென்னை, நவ. 27- தந்தை பெரியாரின் 147ஆம் ஆண்டு பிறந்த நாளை முன்னிட்டு சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்தின் சார்பில் கல்லூரி மாணவர்களுக்கான பேச்சுப்போட்டி 23/11/2025 ஞாயிறன்று பிற்பகல்  2 மணியளவில் பெரியார் திடலிலுள்ள அன்னை மணியம்மையார் அரங்கில் நடைபெற்றது.

சென்னை மாவட்ட பகுத்தறிவாளர் கழகத்  தலைவர் இரா.சண்முகநாதன் தலைமை ஏற்று உரையாற்றினார்.

மாநில பகுத்தறிவாளர் கழக பொதுச்செயலாளர் ஆ.வெங்க டேசன், மாநில பகுத்தறிவாளர் கழக அமைப்பாளர் கோவி.கோபால் ஆகியோர் முன்னிலையில் பேச்சுப்போட்டி நடைபெற்றது.

போட்டியில் முப்பது மாண வர்கள் பங்கேற்றனர். அதில் சரிபாதி பெண்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

பங்கேற்ற மாணவர்கள் அனைவரும் பெரியாரின் இன்றைய தேவையை உணர்ந்து சிறப்பாக பேசினார்கள்.

பேராசிரியர் இராமலிங்கம், பேராசிரியர் இராசசேகர் ஆகியோர் போட்டியின் நடுவர்களாக இருந்து பேச்சுப் போட்டியினை சிறப்பாக நடத்தி தந்தார்கள்.

பேராசிரியர் இராசசேகர் தனது உரையில் பெரியாரின் தேவை இக் காலகட்டத்தில் எவ்வாறு தேவைப் படுகிறது என்பதை விளக்கினார். அவையில் எப்படி பேச வேண்டும் என்பதை மாணவர்களுக்கு தெளிவுபடுத்தி உரையாற்றினார்.

போட்டியில் வெற்றிபெற்ற மாணவர்களை வாழ்த்தி மாநில பகுத்தறிவாளர் கழகத்தலைவர் இரா.தமிழ்ச்செல்வன் பேசினார். அவர் தனது உரையில் மாண வர்கள் போலி பிம்பங்களில் தடம் மாறாமல் நமது சமுதாய நலனை நோக்கி பயணிக்கும்படி கேட்டுக்கொண்டார். மாணவர் திராவிடர் கழகத்தில் ஏன் சேரவேண்டும் என்பதை விளக்கி உரையாற்றி பரிசுகள் வழங்கினார்.

கலந்து கொண்ட மாணவர் களுக்கு சான்றிதழ்களை மாநில பகுத்தறிவாளர் கழகப் பொதுச்செயலாளர் ஆ.வெங்க டேசன் வழங்கினார்.

போட்டியின் முதல் பரிசினை சென்னை பிராட்வேயில் உள்ள பாரதி மகளிர் கல்லூரியின் மாணவி ஏ.நேகாஷரின் பெற்றார். இரண்டாமிடத்தை சென்னை பல் கலைக் கழகத்தை சேர்ந்த மாணவர் எஸ்.ஹரிஷ்ரவன் பிடித்தார். மூன்றாம் இடம் ஸ்டெல்லா மேரீஸ் கல்லூரி மனைவி ஆர்.கே.கார்த்திகா, முதல் பரிசு ரூ.3000, இரண்டாம் பரிசு ரூ.2000, மூன்றாம் பரிசு ரூ.1000 ஆறுதல் பரிசு ரூ.500 வழங்கப்பட்டது.

நிகழ்ச்சிகளை மாநில பகுத்தறி வாளர் கழக அமைப்பாளர் கோவி.கோபால் ஒருங்கிணைத்தார்.

தோழர்கள் கோ.தங்கமணி, தனலட்சுமி, முரளி சின்னத்துரை ஆகியோர் பார்வையாளர்களாக கலந்துகொண்டு மாணவர்களை உற்சாகப்படுத்தினார்கள். பகுத்தறி வாளர் கழக மாவட்டச் செயலாளர் ஏஜஸ் ஹுசைன் மாணவர்கள் மற்றும் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைவருக்கும்  நன்றி தெரிவித்து  உரையாற்றினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *