தமிழ்நாடு துணை முதல மைச்சரும், திமுக இளைஞரணிச் செயலாளருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களின் 49 ஆம் ஆண்டு பிறந்தநாளையொட்டி (27.11.2025) திராவிடர் கழகத் தலைவர் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தி வருமாறு:
49 ஆம் ஆண்டு பிறந்தநாள் விழா காணும் திராவிட முன்னேற்றக் கழகத்தின் இளை ஞரணிச் செயலாளரும், துணை முதலமைச்சருமான உதயநிதி ஸ்டாலின் அவர்களுக்கு அன்பு கனிந்த நல்வாழ்த்துகளை முதலாவதாக தெரிவித்துக் கொள்கிறேன்
தங்கள் தந்தையாருக்கே உரிய உழைப்பை வரித்துக் கொண்டு, தந்தை பெரியார் கொள்கைகளை நெஞ்சில் ஏந்தி, சுயமரியாதை இயக்க, திராவிட இயக்கக் கொள்கைகளில் சிறிதும் சமரசமன்றிச் செயல்படும் தங்களின் லட்சியப் பயணங்கண்டு தாய்க்கழகமாம் திராவிடர் கழகம் பூரிக்கிறது.
நாள்தோறும் நாடு முழுவதும் தேனீயாய்ச் சுற்றி ‘திராவிட மாடல்’ ஆட்சியின் சாதனைகளை மக்கள் மத்தியில் கொண்டு செல்வதும், இளைஞர்களை ஈர்ப்பதும் இந்தக் காலகட்டத்தில் மிகத் தேவையான அரும் பணியாகும். அதனைத் தாங்கள் துல்லியமாக செய்து வருகிறீர்கள்.
இது மிகவும் பாராட்டுக்குரியதாகும்!
தங்கள் பணி மேலும் சிறப்பாகத் தொடரவும், நல்ல உடல் நலத்துடன், வளமுடன் நீடூ வாழ, தாய்க் கழகத்தின் சார்பில், அன்பு கனிந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன் என்று பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில் திராவிடர் கழகத் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்.
