சென்னை,நவ.8- டிசம்பர் மாதம் 16ஆம் தேதிக்குப் பிறகு பிற மாநி லங்களில் பதிவு செய்யப்பட்ட ஆம்னி பேருந்துகள் தமிழ்நாட்டில் இயங்க அனுமதிக்கப்பட மாட் டாது என்று தமிழ்நாடு அரசு திட்டவட்டமாக தெரிவித்தது.
விழாக் காலங்களில் ஆம்னி பேருந்துகளில் கூடுதல் கட்டணம் வசூலிப்பது தொடர்பான புகார் கள் வந்த நிலையில், கடந்த விடுமுறை நாட்களில், சிறப்புக் குழுக்கள் மூலம் பேருந்துகளில் சோதனைகள் நடத்தப்பட்டன.
பிற மாநில ஆம்னி பேருந்து களால் தமிழ்நாடு அரசுக்கு ஆண்டொன்றுக்கு ரூ. 28.16 கோடி வரை இழப்பு ஏற்படுவதாகவும், பர்மிட் நிபந்தனைகளை மீறி இயங்கும் இத்தகைய வாகனங்கள் விபத்திற்கு உள்ளாகும் போது பயணிகளுக்கு இழப்பீடு கிடைப் பதும் கேள்விக்குறியாகிறது என் றும் கூறியுள்ளது.
இந்நிலையில், 6.11.2023 அன்று மீண்டும் போக்குவரத்து ஆணையர் தலைமையில் ஆம்னி பேருந்து உரிமையாளர்கள் சங்கத்தினருடன் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டதில், ஆம்னி பேருந் துகளின் உரிமையாளர்கள் ஏற் கெனவே வழங்கப்பட்ட கால அவகாசத்தை விட (30.11.2023) மேலும் 15 நாட்களுக்கு நீட்டித்து தர வேண்டுகோள் விடுத்தனர்.
அதனடிப்படையில் அனைத்து பிற மாநில ஆம்னி பேருந்துகளும் 16.12.2023க்குள் தமிழ்நாட்டில் மறுபதிவு செய்து முடிக்க வேண் டும் என்று தமிழ்நாடு அரசு தெரிவித்துள்ளது.