நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரை தமிழ்நாட்டின் ஏற்றுமதி ரூ.2.25 லட்சம் கோடி அதிகரிப்பு!

1 Min Read
வரலாற்று நிகழ்வு

நாள் தோறும் ஒரு அறிய வரலாற்று நிகழ்வு

பொன்மொழிகள்

தந்தை பெரியார், ஆசிரியர் கி. வீரமணி உட்பட பல திராவிட இயக்க தலைவர்களின் பொன்மொழிகள்.

நல்ல நேரம்: 24 மணி நேரமும்

மூளைக்கு விலங்கு இடும் மூட நம்பிக்கைகள் இல்லாத பகுத்தறிவு நாள்காட்டி, பெரியார் நாள்காட்டி

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு தகவல்!

சென்னை, நவ. 22 – தமிழ்நாட்டின் ஏற்றுமதி, நடப்பு நிதியாண் டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளது.

முதலிடத்தில்
தமிழ்நாடு

இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில், இந்தியாவிலேயே 31 ஆயிரத்து 517 தொழிற்சாலைகளுடன் தமிழ்நாடு முதலிடத்தில் உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

அதன்படி, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர் மாவட்டங்களில் வாகன உற்பத்தி ஆலைகளும், திருப்பூர், கோவை மாவட்டங்களில் ஜவுளி ஆலைகளும் அதிகளவில் உள்ளன.

இந்நிலையில், தமிழ்நாட்டின் ஏற்றுமதி நடப்பு நிதியாண்டில் ஏப்ரல் முதல் செப்டம்பர் வரையிலான ஆறு மாதங்களில், 2.25 லட்சம் கோடி ரூபாயாக அதிகரித்துள்ளதாக கூறப்பட்டுள்ளது. முந்தைய ஆண்டின் இதே காலத்தில், ஒரு லட்சத்து 97 லட்சம் கோடி ரூபாயாக இருந்ததாகவும் காஞ்சிபுரம் மாவட்டத்தில் ஏற்றுமதி மட்டும், ஒரு லட்சம் கோடி ரூபாயுடன் முதலிடத்தில் உள்ளதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

சென்னை மாவட்டம் 32 ஆயிரத்து 422 கோடி ரூபாயுடன் இரண்டாவது இடத்திலும், திருப்பூர், 21 ஆயிரத்து 328 கோடி ரூபாய் ஏற்றுமதியுடன் மூன்றாவது இடத்தில் உள்ளது. மோட்டார் வாகனம், ஆயத்த ஆடைகள், தோல் பொருட்கள், எலக்ட்ரானிக்ஸ் சாதனங்கள், ஜவுளி உற்பத்தியில் தமிழ்நாடு முன்னணி யில் உள்ளது.

அவற்றின் உற்பத்தியில் ஈடு பட்டுள்ள நிறுவனங்கள், தங்களின் தயாரிப்புகளை உள்நாட்டு சந்தையில் விற்பதுடன், வெளிநாடுகளுக்கும் ஏற்றுமதி செய்வதாக, இந்திய ஏற்றுமதி நிறுவனங்களின் கூட்டமைப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *