

சென்னையில் இருந்து கோயமுத்தூருக்கு தொடர்வண்டியில் வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட செயலாளர் வழக்குரைஞர் பிரபாகரன் தலைமையில் தோழர்கள் பயனாடை அணிவித்தும், புத்தகம் வழங்கியும் அன்போடு வரவேற்றனர். தங்கும் விடுதிக்கு வருகை தந்த தமிழர் தலைவருக்கு மாவட்ட தலைவர் கோவை சந்திரசேகரன் பயனாடை அணிவித்து வரவேற்றார். திமுக பொதுக்குழு உறுப்பினர் குறிச்சி பிரபாகரன், திமுக மாவட்ட அலுவலக பொறுப்பாளர் பூபாலன், காந்திபுரம் பகுதி செயலாளர் (தி.மு.க.) ஆர்.எம். சேதுராமன், சிவானந்தா காலனி பகுதி கழகப் பொறுப்பாளர் சிவராஜ் மற்றும் தோழர்கள் தமிழர் தலைவருக்கு பயனாடை அணிவித்தும் புத்தகங்கள் வழங்கியும் வரவேற்றனர். குறிச்சி பிரபாகரன் தனது இல்ல மணவிழா அழைப்பிதழை தமிழர் தலைவரிடம் வழங்கினார். (கோவை, 22.11.2025)
