சென்னை, மே 9 – இந்தியாவுக்கே வழிகாட்டும் சாதனைகளை திமுக அரசு இரு ஆண்டுகளில் படைத் துள்ளதாக விடுதலைச் சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல்.திருமாவளவன் பாராட்டு தெரிவித்துள்ளார். அவர் திங்கள்கிழமை (8.5.2023) வெளியிட்ட அறிக்கை:
தமிழ்நாட்டில் திமுக ஆட்சிப் பொறுப்பேற்று ஈராண் டுகள் முடிந்து, மூன்றாவது ஆண்டில் அடி யெடுத்து வைத்துள்ளது. இந்த ஆட்சி நிர்வாகத்தால் ஏழை, எளியோர் மகிழ்ச்சியில் உள்ளனர். இல்லத் தலைவி களுக்கு மாதம்தோறும் உரிமைத் தொகை, பெண்களுக்கு கட்டணமில்லாத பேருந்துப் பயணம் போன்ற நலத் திட்டங்களைப் பிற மாநிலங்கள் பின் பற்றும் வகையில், இந்தியாவுக்கே வழிகாட்டும் சாதனை களை திமுக அரசு படைத்துள்ளது.
இது தமிழ்நாட்டுக்குப் பெருமை சேர்ப்பதாக அமைந்துள்ளது. தேர்தல் வாக்குறுதிகளில் பெரும்பாலா னவற்றை நிறைவேற்றியிருக்கும் திமுக அரசுக்கு பாராட் டுகள் என்று கூறியுள்ளார்.