தமிழ்நாட்டு வாக்காளர்களுக்கும், கட்சிகளுக்கும் வழிகாட்டியாக தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி உரை!

3 Min Read

ஜனநாயகம் மிகவும் பரிதாபகரமான நிலையில் இருக்கிறது!
பீகார் தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் வரவேண்டுமா?

சென்னை. நவ. 20- பீகாரின் தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் வரக்கூடிய ஆபத்து இருக்கிறது. இதுதான் கட்சிகளும், மக்களும் பெற வேண்டிய படிப்பினைகள் என்று தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் எச்சரித்து உரையாற்றினார்.

திராவிடர் கழகத்தின் சார்பில், ”பீகார் தேர்தல் முடிவுகள்: வாக்காளர்களும், கட்சிகளும் பெற வேண்டிய படிப்பினைகள்!” எனும் தலைப்பில், சென்னை பெரியார் திடலில் உள்ள நடிகவேள் எம்.ஆர்.இராதா மன்றத்தில் 19.11.2025 அன்று மாலை 6.30 மணியளவில் ஒரு சிறப்புக் கூட்டம் நடைபெற்றது.

இக்கூட்டத்திற்குத் திராவிடர் கழகச் செயலவைத் தலைவர் வழக்குரைஞர் வீரமர்த்தினி அனைவரையும் வரவேற்று உரையாற்றினார். அதைத் தொடர்ந்து கழகத்தின் துணைத் தலைவர் கவிஞர் கலி.பூங்குன்றன் தொடக்கவுரையாற்றினார்.

நிறைவாக கழகத் தலைவர் படக்காட்சி உதவியுடன் தமது சிறப்புரையை நிகழ்த்தினார்.

அதற்கு முன்னதாக, கடந்த நவம்பர் 2 ஆம் தேதி அன்று தமிழ்நாடு அரசு சார்பில் கூட்டப்பட்ட அனைத்துக் கட்சிக் கூட்டத்தில் திராவிடர் கழகத்தின் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள் தெரிவித்த சட்ட விளக்கங்கள் செயற்கை நுண்ணறிவுத் தொழில்நுட்பத்தில் 17 நிமிட காணொலியாகத் தயார் செய்யப்பட்டு திரையிடப்பட்டது.

கழகத் தலைவர் தமது உரையில், பீகார் சட்டமன்றத் தேர்தலுக்கு முன்பு, இந்திய தேர்தல் ஆணையம்  வாக்காளர் பட்டியல்களின் சிறப்புத் தீவிரத் திருத்தத்தை (Special Intensive Revision – SIR) மேற்கொண்டதும், ஒவ்வொரு தொகுதியிலும் தொழில் தொடங்குவதற்கு என்று  சுமார் 60 ஆயிரம் பெண்களுக்குத் தலா ரூ.10 ஆயிரத்தைத்  தேர்தலுக்கு சில நாள்களுக்கு முன்பு ஒவ்வொருவருடைய வங்கிக் கணக்கிலும் செலுத்தியதும், மாநிலத்திற்கான தேர்தல் என்றில்லாமல், ஒன்றிய அரசிற்கு முட்டுக்கொடுக்கும் மாநிலம் என்பதால், பிரதமர் மோடியும், ஆர்.எஸ்.எஸ்., பா.ஜ.க.வும் இந்தத் தேர்தலில் அதீதகவனம் செலுத்தியதும் ஏன்? என்பவற்றையெல்லாம் எடுத்துரைத்தார் தமிழர் தலைவர் ஆசிரியர் கி.வீரமணி அவர்கள்.

‘‘பீகாரில் இளந்தலைவர் ராகுல் காந்தி, தேஜஸ்வி போன்றோர்  ஏற்படுத்திய விழிப்புணர்வை காங்கிரஸ் கட்சி சரியாகப் பயன்படுத்திக் கொள்ளவில்லை” என்பதை எல்லோருக்கும் பொதுவானவர்கள் நாங்கள் என்ற உரிமையுடன் சுட்டிக்காட்டுகிறோம் என்றார். அது தமது கடமையும் கூட என்றும் விளக்கினார். அதிலிருந்து தவறினால், பீகாரின் தேர்தல் முடிவுகள் இந்தியா முழுவதும் வரக்கூடிய ஆபத்து இருக்கிறது. இதுதான் கட்சிகளும், மக்களும் பெற வேண்டிய முக்கியமான படிப்பினைகள் என்றும், தமிழ்நாட்டில் இருப்பது அரசியல் கூட்டணி அல்ல, கொள்கைக் கூட்டணி. ஆகவே, தி.மு.க. தலைமையில் இருக்கிற கூட்டணிதான் வெற்றி பெறும். அதற்கு அனைவரும் அவரவர் வாக்கை சரிபார்த்து உறுதி செய்யுங்கள்’’ என்று கூறி உரையை நிறைவு செய்தார். நிகழ்ச்சியில் கழகத் தோழர்கள் மற்றும் பொதுமக்கள் ஏராளமானோர் கலந்து கொண்டு சிறப்பித்தனர்.

நிறைவாக இணைப்புரை வழங்கிய கழகத்தின் துணைப் பொதுச்செயலாளர் ச.பிரின்சு என்னாரெசு பெரியார் நன்றி கூறி நிகழ்ச்சியை நிறைவு செய்தார்.

இக்கூட்டத்தில் திராவிடர் கழகப் பொதுச் செயலாளர் வீ.அன்புராஜ், கழக வழக்குரைஞரணித் தலைவர் வழக்குரைஞர் த.வீரசேகரன், தலைமை செயற்குழு உறுப்பினர்கள் வழக்குரைஞர் சு.குமாரதேவன், தே.செ.கோபால், மாநில இளைஞரணி துணைச் செயலாளர் வழக்குரைஞர் சோ.சுரேஷ், தாம்பரம் மாவட்ட தலைவர் ப.முத்தையன், தென்சென்னை மாவட்ட தலைவர் இரா.வில்வநாதன், செயலாளர் செ.ர.பார்த்தசாரதி, வடசென்னை மாவட்ட தலைவர் வழக்குரைஞர் தளபதி பாண்டியன், செயலாளர் புரசை சு.அன்புச்செல்வன், சோழிங்கநல்லூர் மாவட்ட தலைவர் வேலூர் வே.பாண்டு, மாநில ப.க. தலைவர் இரா.தமிழ்ச்செல்வன், செயலாளர் ஆ.வெங்கடேசன், துணைத் தலைவர் வேல்.சோ.நெடுமாறன், சி.வெற்றிச்செல்வி, பெரியார் சுயமரியாதைத் திருமண நிலைய இயக்குநர் பசும்பொன், பொதுக்குழு உறுப்பினர் தங்க.தனலட்சுமி, கவிஞர் கண்மதியன், இளவழகன், நெய்வேலி வெ.ஞானசேகரன், வழக்குரைஞர் த.அருண், வழக்குரைஞர் மு.வேலவன், மு.சண்முகப்பிரியன், உடுமலை வடிவேல், கோ.தங்கமணி, கி.இராமலிங்கம், நா.பார்த்திபன், சி.பாசுகர், ஏ.மணிவண்ணன், த.பர்தின், நா.தமிழினியன், சா.தாமோதரன், பூவை தமிழ்ச்செல்வன், க.கலைமணி, வை.கலையரசன், மு.ரா.மாணிக்கம், ஜனார்த்தனம், கூடுவாஞ்சேரி மா.இராசு, செ.பெ.தொண்டறம், த.மரகதமணி, பூவை.செல்வி, த.இளவரசி மற்றும் ஏராளமான தோழர்கள் கூட்டத்தில் கலந்து கொண்டனர்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *