விண்கலம் தயாரிப்பை மூன்று மடங்காக அதிகரிக்க இஸ்ரோ திட்டம்

2 Min Read

சென்னை, நவ.18- விண்வெளி ஆய்வில் உலக நாடுகளுக்கு சவால் அளிக்கும் வகையில் இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) செயல்பட்டு வருகிறது. இந்த துறையில் பல்வேறு சாதனைகளை புரிந்து வரும் இஸ்ரோவின் வருங்கால திட்டங்கள் குறித்து அதன் தலைவர் நாராயணன் விவரித்து உள்ளார்.
இது தொடர்பாக செய்தி நிறுவனம் ஒன்றுக்கு அவர் அளித்துள்ள சிறப்பு பேட்டியில் கூறியிருப்பதாவது:-
அறிவியல், தொழில்நுட்பம் மற்றும் தொழில்துறை திறனில் விரைவான அளவிடுதலின் ஒரு கட்டத்துக்கு இஸ்ரோ தயாராகி வருகிறது. நடப்பு நிதியாண்டு இறுதிக்குள் மேலும் 7 ராக்கெட்டுகளை விண்ணில் ஏவ இலக்கு வைக்கப்பட்டு உள்ளது. இதில் வணிக ரீதியான தகவல் தொடர்பு செயற்கைக்கோள் மற்றும் பல்வேறு பி.எஸ்.எல்.வி., ஜி.எஸ்.எல்.வி. திட்டங்களும் அடங்கும்.
முதல் முறையாக ஒட்டுமொத்தமாக இந்திய தொழில்துறையில் தயாரிக்கப்பட்ட பி.எஸ்.எல்.வி. ராக்கெட் ஏவும் திட்டமும் இதில் அடங்கும். இது ஒரு மைல்கல் சாதனையாக இருக்கும். சந்திரயான்-4 திட்டத்துக்கு அரசு ஒப்புதல் அளித்து இருக்கிறது. நிலவில் இருந்து மாதிரியை எடுத்து பூமிக்கு திரும்பும் வகையில் இந்த திட்டம் வடிமைக்கப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் மிகவும் சிக்கலான நிலவு ஆய்வு திட்டமாக இருக்கும்.
சந்திரயான்-4 திட்டத்தை 2028ஆம் ஆண்டு செயல்படுத்த நாங்கள் திட்டமிட்டு உள்ளோம். மற்றொரு முக்கிய திட்டம் லூபெக்ஸ். இது ஜப்பான் விண்வெளி நிறுவனத்துடன் இணைந்து நிலவின் துருவத்தை ஆய்வு செய்யும் திட்டம் ஆகும். அதிகரித்து வரும் பணி தேவையை பூர்த்தி செய்ய, அடுத்த 3 ஆண்டுகளில் அதன் வருடாந்திர விண்கலம் தயாரிப்பை மூன்று மடங்காக அதிகரிக்க இஸ்ரோ திட்டமிட்டு வருகிறது.
விண்வெளியில் இந்தியாவின் விண்வெளி நிலையத்தை 2035ஆம் ஆண்டுக்குள் நிறுவுவதற்கான பணிகளை இஸ்ரோ தொடங்கி இருக்கிறது. இதற்கான முதல் 5 தொகுதிகள் 2028ஆம் ஆண்டுக்குள் விண்வெளியில் நிலைநிறுத்தப்படும். விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் இந்தியாவின் ககன்யான் திட்டத்தைப் பொறுத்தவரை, அதன் ஆளில்லாத விண்கலம் அனுப்பும் காலக்கெடு மட்டுமே மாற்றியமைக்கப்பட்டு உள்ளது.
இந்த திட்டம் முதலில் 2025ஆம் ஆண்டுக்கு திட்டமிடப்பட்டது. அத்துடன் விண்வெளி வீரர்களுடன் அனுப்பும் விண்கலம் 2027-க்கு திட்டமிடப்பட்டு இருந்தது. அதை நாங்கள் அப்படியே வைத்திருக்கிறோம். மேலும் நிலவுக்கும் இந்திய விண்வெளி வீரர்களை அனுப்பி திருப்பி அழைத்து வரும் திட்டத்தை 2040ஆம் ஆண்டுக்குள் செயல்படுத்த பிரதமர் மோடி அறிவுறுத்தி இருக்கிறார்.
தற்போதைய நிலையில் பன்னாட்டு விண்வெளி பொருளாதாரத்தில் இந்தியாவின் பங்கு சுமார் 2 சதவீதம் ஆகும். அதை 2030ஆம் ஆண்டுக்குள் 8 சதவீதமாக அதிகரிக்க இஸ்ரோ உழைத்து வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

விடுதலை வளர்ச்சிக்கு உரமிடுங்கள்..

அன்பார்ந்த தோழர்களே, தந்தை பெரியார் அவர்களால் தொடங்கப்பட்டு, திராவிட இயக்கத்தின் முதன்மைக் குரலாக, உலகின் முதல் மற்றும் ஒரே பகுத்தறிவு நாளேடாக திகழ்ந்து வருகிறது "விடுதலை" நாளேடு.

"விடுதலை" என்பது ஒரு நாளேடு மட்டுமல்ல; இது ஒரு இயக்கம். விடுதலை தன் பணியைத் தொய்வு இன்றித் தொடர, உங்கள் பொருளாதார பங்களிப்பு மிகத் தேவை. பெரியார் தொடங்கி வளர்த்த விடுதலையை உரமிட்டு இன்னும் வளர்க்க வேண்டிய கடமை நமக்கு இருக்கிறது. உங்கள் நன்கொடை அந்த வளர்ச்சிக்கு உதவும்.

தொகை எவ்வளவு என்பது முக்கியமல்ல! உங்கள் பங்களிப்பே முக்கியம்! நீங்கள் தரும் ஒவ்வொரு ரூபாயும் சமூகநீதிச் சுடரை ஒளிர வைக்கும். நன்றி!

இணையம்வழி விடுதலை வளர்ச்சி நிதி தந்தவர்கள் பட்டியல் காண  

Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *