சூத்திரன் கண்ணால் பார்த்த உணவை உண்ணக்கூடாது என்று கூறும் ஸநாதனம் நமக்கு தேவையா?

Viduthalai
3 Min Read

உயர்நீதிமன்றத்தில் அமைச்சர் சேகர்பாபு தரப்பில் எடுத்துரைப்பு

தமிழ்நாடு

சென்னை, நவ.8- பன்றி நுகர்ந்த உணவையும், சூத் திரன் கண்ணால் பார்த்த உணவையும் உண்ணக் கூடாது என்று இந்த ஸநாதனம் கூறுகிறது. இப் படிப்பட்ட ஸநாதனம் நமக்குத் தேவையா? என்று அமைச்சர் பி.கே.சேகர் பாபு தரப்பில் உயர்நீதி மன்றத்தில் வாதிடப்பட்டது. 

ஸநாதன ஒழிப்பு நிகழ்ச்சியில் கலந்து கொண்டதால். அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபுவை பதவி நீக்கம் செய்யக்கோரி தாக்கல் செய்த வழக்கு நீதிபதி அனிதா சுமந்த் முன்பு நேற்று (7.11.2023) விசாரணைக்கு வந்தது. அப்போது, அமைச்சர் பி.கே.சேகர்பாபு தரப்பில் மூத்த வழக்குரைஞர் என்.ஜோதி ஆஜராகி வாதிட்டார். 

அவர் கூறியதாவது:-

கோவில் சொத்துகளை இந்து அமைப்பினர் ‘ஸ்வாஹா’ செய்து விட்டனர். அந்தசொத் துகளை மீட்டதால், சம்பந்தமே இல்லாமல், அமைச்சருக்கு எதி ராக இந்த வழக்கை தாக்கல் செய்துள்ளனர்.

இந்து மதத்தில் சுருதி அடிப்ப டையானது. இதை உருவம் இல்லா இறைவன் உருவாக்கினான் என்றும், மனு ஸ்மிருதி என்பது மனிதனால் உரு வாக்கப்பட்டது என்றும் இந்து நூல்கள் கூறுகிறது. இந்து மதம் காலத்துக்கு ஏற்ப மாறும் தன்மை கொண்டது. உருவம் இல்லாத இறைவன் முதலில் இருந்தார். பின்னர் பிரம்மா, விஷ்ணு, சிவன் என்ற பல வடிவில் இறைவன் வந்தார். அதைத்தொடர்ந்து ராமர், கிருஷ்ணன் வந்து, தற்போது சாய்பாபாவும் வந்து விட்டார். எனவே, ஸநாதன ஒழிப்பு விவாதம் கண்டு கோபப்படாமல், அதை மாற்றத்துக்கான ஒரு வழியாகப் பார்க்கவேண்டும்.

இந்து மதத்தை எதிர்த்து புத்தர் புத்த மதத் தையும், குருநானக் சீக்கிய மதத்தையும், சமரச சுத்த சன்மார்க்கத்தை ராமலிங்க அடிகளாரும் உருவாக் கினர். அவர்களை போல பலர் இந்து மதத்துக்கு எதிரான கருத்துகளை கூறியுள்ளனர். அந்த வழியில் உதயநிதி ஸ்டாலின் கருத்துகளை தெரிவித்துள்ளார். இது என்ன தவறு? சதுர்மறை ஆகம சாத்திரமெல்லாம். சந்தைப் படிப்பு, நம் சொந்த படிப்போ? என்று கேள்வி எழுப்பிய வள்ளலாரும் இந்து தான்.

சேகர்பாபு அய்யப்ப பக்தர். இந்து மதத்தைச் சேர்ந்தவர்தான். இந்துவாக பிறந்ததை பெருமை யாக கருதினாலும், அதற்காக ஒருபோதும் ஸநாத னத்தை ஏற்க முடியாது. 

 ஏனென்றால், பிரம்மாவின் வாயில் இருந்து பிராமணன் வந்தான் என்று ஒவ்வொரு உடல் உறுப்பு வழியாக 4 வர்ண மக்கள் வந்தனர் என்று கூறுகின்றனர். இவர்கள் எல்லாம் ஒருதடவைத்தான் பிரம்மன் உடலில் இருந்து வந்தனரா? அதன் பின்னர் இதுநாள் வரை அவர்கள் சந்ததியினர் வரவே இல்லையா? என்ற கேள்வி எழுகிறது.

அதுமட்டுமல்ல, பன்றி நுகர்ந்த உணவையும், சூத்திரன் கண்ணால் பார்த்த உணவையும் உண்ணக்கூடாது என்று இந்த ஸநாதனம் கூறு கிறது. இப்படிப்பட்ட சனாதனம் நமக்கு தேவையா? இதை ஒழிக்க வேண்டாமா? 

மனிதனை தரம் தாழ்த்தும் ஸநாதனத்தை ஒழிக்க வேண்டும் என்று பேசியது எப்படி நாட்டின் இறையாண்மைக்கு எதிரானது ஆகிவிடும்? திராவிடனும், ஆரியனும் இந்துதான். ஆனால், என் கொள்கையைத்தான் நீ பின்பற்ற வேண்டும் என்று ஆரியன் நிர்ப்பந்தம் செய்யும்போதுதான் பிரச்சினை எழுகிறது. கோவில்களில் எந்தந்த ஜாதியினர் எந்த இடத்தில் இருந்து சாமிகும்பிட வேண்டும்? என்று சென்னை உயர்நீதிமன்றம் 1914 ஆம் ஆண்டு தீர்ப்பு அளித்துள்ளது. உச்சநீதிமன் றத்தில் 5 நீதிபதிகள் கொண்டு முழு அமர்வு பிறப் பித்த தீர்ப்பில், “இந்துக்கள் என்பது ஆரிய வம் சத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் தற்போதைய ஈரான் நாட்டில் இருந்து வந்து, சிந்து நதிக்கரையில் தங்கிருந்தனர். இவர்களைத்தான் இந்தோய் என்று அழைத்து, அதுவே இந்து என்று மருவியது” என்று கூறப்பட்டுள்ளது.

குடியரசு மேனாள் தலைவர் ராதாகிருஷ்ணன் எழுதிய புத்தகத்தில், இந்து மதம் என்பது அருங்காட்சியத்தில் உள்ள பொருள் போல, அது காலத்துக்கு ஏற்ப மாறிவிடும் என்று கூறியுள்ளார். எனவே, இந்து மதம் மாற்றத்தை காணவேண்டும் என்றால், இது போல விவாதங்களை ஏற்க வேண் டும். இந்துக்களுக்கு ஸநாதனம்தான் பொதுவானது என்பதை ஏற்க முடியாது. அதை எதிப்பதால், அர சமைப்புச் சட்டத்துக்கு எதிரானது என்று கூறவும் முடியாது. 

-இவ்வாறு அவர் வாதிட்டார்.

இதையடுத்து தி.மு.க. எம்.பி. ஆ.இராசா தரப்பு வாதத்துக்காக வழக்கு விசாரணை இன்றைக்கு (8.11.2023) நீதிபதி தள்ளிவைத்தார்.

Share This Article
Leave a Comment

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *