- ஒதுக்கீட்டின் அடிப்படை நோக்கம்
o ஒதுக்கீடு என்பது வருமானம் பற்றியது அல்ல;
அது சமூக பிரதிநிதித்துவம் மற்றும் சமூக நீதி
பற்றியது.
- SC/STக்களுக்கு கிரீமிலேயர் நீட்டிப்பு
o SC/ST சமூகங்களுக்கு “கிரீமிலேயர்” கொள்கையைப்
பயன்படுத்த வேண்டும் என்ற கருத்து, வரலாற்று
அடக்குமுறையை புறக்கணிக்கும் மிக ஆபத்தான
நிலைப்பாடு.
- அரசியலமைப்பு மற்றும் நிபுணர் கருத்து
o அம்பேத்கர் தெளிவாக கூறியது: ஒதுக்கீட்டின்
அடிப்படை ஜாதி அடிப்படையிலான சமூக
பிற்படுத்தப்பட்ட தன்மையே; பொருளாதார நிலை
அல்ல.
o அமெரிக்க அறிஞர் தாமஸ் வைஸ்காப்: ஒதுக்கீடு
என்பது சமூகக் குழுக்களின் பங்கு
அதிகரிப்பதற்காகவே.
- இன்றைய உண்மை நிலை (அதிகாரபூர்வ தரவுகள்)
o உச்சநீதிமன்றம் (34): OBC + SC/ST பிரதிநிதித்துவம்
சொற்பமே.
o உயர் நீதிமன்றங்கள் (743): OBC + SC/ST சேர்த்து
18 விழுக்காடு மட்டுமே.
o மத்திய செயலாளர்கள் (89): OBC—0; SC/ST—4.
- EWS–கிரீமிலேயர் அநீதி
o EWSக்கு ரூ.8 லட்சம் வருமான வரம்புடன் விசாலமான
சலுகை.
o ஆனால் அதே நேரத்தில், ஓபிசி சமூகங்களுக்கு
“வருமான அளவுகோல்” விதித்து உரிமையை
குறைப்பது — புதிய பார்ப்பனீய அநீதி.
- ஏன் கவனமாக இருக்க வேண்டும்?
o ஓபிசிக்கள் ஏற்கனவே தங்களை ஒடுக்குகிற
கிரீமிலேயர் கொள்கையை நீக்கக் கோருகின்றனர்.
o இதே தவறை SC/ST மீதும் திணிப்பது சமூக நீதியை
மேலும் பின்னுக்கு தள்ளும்.
- முக்கிய வேண்டுகோள்
o சமூக நீதி என்பது ஜாதி அடிப்படையிலான
பாகுபாட்டை எதிர்க்கும் போராட்டம்.
o இந்தப் போராட்டம் ஒருவரின் ஊதியம், வருமானம்,
பதவி ஆகியவற்றால் முடிவதில்லை.
o எனவே உச்சநீதிமன்றம் ஒடுக்கப்பட்டோரின்
நியாயத்தை காக்கும் காவலராக தலைமை நீதிபதி
செயல்பட வேண்டும்.
– கோ.கருணாநிதி
18.11.2025
