திருவனந்தபுரம், நவ.18– சபரிமலையில் தங்கம் அபகரிக்கப்பட்ட விவகாரம் தொடர்பாக சிறப்பு விசாரணை குழுவினர் சன்னிதானத்தில் 2 மணி நேரம் சோதனை நடத்தினர். அப்போது தங்க தகடு மாதிரிகளை ஆய்வுக்காக எடுத்துச் சென்றனர்.
தங்கம் அபகரிப்பு
சபரிமலையில் 2019 ஆம் ஆண்டு கால கட்டத்தில் துவார பாலகர் சிலைகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்டிருந்த தங்க தகடுகளில் இருந்து சுமார் 2 கிலோவுக்கு அதிகமான தங்கம் அபகரிக்கப்பட்ட விவகாரத்தில் இதுவரை 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனிடையே சபரிமலையில் கடந்த செப்டம்பர் மாதம் துவார பாலகர் சிலை கவசம் மற்றும் கதவு நிலைகள் மீண்டும் புதுப்பிக்கப்பட்டு நிறுவப்பட்டது.
அவற்றில் பூசப்பட்டது தங்கம் தானா? எவ்வளவு தங்கம். தாமிரம் எவ்வளவு உள்ளது என்பதை கண்டறிய சோதனை நடத்த கேரள உயர்நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது.
இதையடுத்து அதன் மாதிரி துண்டுகளை சேகரித்து சோதனை நடத்த தந்திரியி டம் அனுமதி கேட்டு சிறப்பு விசாரணை குழு தாக்கீது அனுப்பி இருந்தது. அதற்கு தந்திரி தரப்பில் அனுமதி வழங்கப்பட்டது.
இதனை தொடர்ந்து சிறப்பு விசாரணை குழுவின் தலைமை அதிகாரியான சசிதரன் தலைமையில் 15 பேர் அடங்கிய குழுவினர் நேற்று முன்தினம் (16.11.2025) இரவு சன்னிதானம் வந்தனர். இந்தகுழுவில் தடயவியல் நிபுணர்களும், பொருளாதார குற்றப் புலனாய்வு பிரிவு அதிகாரிகளும் இடம் பெற்றுள்ளனர்.
அவர்கள் நேற்று (17.11.2025) மதியம் ஒரு மணிக்கு கோவில் நடை அடைக்கப்பட்டதும் 2 மணி நேரம் விசாரணை மற்றும் சோதனை நடத்தினர். அப்போது துவார பாலகர் சிலைகளில் பதிக்கப்பட்ட தகடுகளின் மாதிரி துண்டுகள் மற்றும் கதவு நிலைகளில் பதிக்கப்பட்ட தகடுகளின் மாதிரி துண்டுகளைச் சேகரித்தனர்.
இது தொடர்பாக தலைமை அதிகாரி சசிதரன் கூறும் போது, ‘இந்த மாதிரி தகடுகளின் துண்டு கள் திருவனந்தபுரத்தில் உள்ள தடயவியல் ஆய்வ கத்திற்கு அனுப்பி வைக்கப்படும். அதில் சபரிமலையில் தற்போது பதிக்கப்பட்டுள்ள தகடுகளில் பூசப்பட்ட தங்கத்தின் எடை எவ்வ ளவு? தாமிரத்தின் எடை எவ்வளவு? என்பது துல்லியமாகக் கணக்கிடப்படும். தொடர்ந்து பரிசோதனை ஆய்வு அறிக்கை உயர்நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்படும்’ என்றார்.
சபரிமலையில் நேற்று நடைபெற்ற சோத னையால் பிற்பகல் ஒரு மணிமுதல் 3 மணி வரை அய்யப்ப பக்தர்களுக்கு கட் டுப்பாடு விதிக்கப்பட்டு இருந்தது. மண்டல, மகர விளக்கு சீசன் தொடங்கிய முதல் நாளிலேயே சன்னிதானத்தில் துவார பாலகர் சிலைகளில் பதிக்கப்பட்ட தகடுகள் அகற்றப்பட்ட சம்பவம் பக்தர்கள் இடையே கவலையை ஏற்படுத்தி உள்ளது.
